"'கோலி', 'ரவி சாஸ்திரி' கூட அவ்ளோ 'சண்டை' நடக்கும்.. மாறி மாறி 'முகத்த' கூட பாக்க மாட்டோம்.." 'முன்னாள்' தேர்வாளர் உடைத்த 'சீக்ரெட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.கே பிரசாத் (MSK பிரசாத்), இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இருந்துள்ளார்.

தனது பதவிக் காலத்தில், பிரசாத் எடுத்த பல முடிவுகள், கடும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. உதாரணத்திற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில், ராயுடுவைச் சேர்க்காமல், விஜய் சங்கரை இணைத்திருந்தார். இதனால், அதிக கண்டனத்திற்கு ஆளாகியிருந்தார் பிரசாத். அது மட்டுமில்லாமல், ரசிகர்களின் வெறுப்பையும் அவர் சம்பாதித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அளித்த பேட்டி ஒன்றில் பேசிய பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) ஆகியோருடன் நடந்த வாக்குவாதம் குறித்த சில சம்பவங்களைப் பகிர்ந்து
கொண்டுள்ளார்.


'எங்களுக்குள் நடந்துள்ள சண்டையைப் பற்றி அவர்களிடமே கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும். சில நேரம், அணியினரை தேர்வு செய்வதற்கான மீட்டிங் முடிந்த பிறகு, நாங்கள் ஒருவக்கொருவர் முகத்தைப் பார்க்கக் கூட விரும்ப மாட்டோம். அந்த அளவுக்கு விவாதங்கள் மாறி மாறி நடக்கும்.

ஆனால், மறுநாளே எப்போதும் போல சகஜமாக பேசிக் கொள்வோம். அதன் பிறகு, நாங்கள் விவாதித்ததில் இருந்த விஷயங்களை, அவர்கள் இருவரும் அங்கீகரித்து அதனை ஒப்புக் கொள்வார்கள். நான் ஒரு மேனேஜ்மேண்ட் மாணவன். இதனால், ஒரு சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

யாரையும் குறை சொல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது. நாங்கள் எப்படி கடுமையான விவாதங்களை மேற்கொள்வோம் என்பது பற்றி, கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் கேட்டால் சொல்வார்கள். நான் இருவரையும், பல முறை சமாதானம் செய்யும் அளவுக்கு பிரச்சனைகள் நடந்துள்ளது' என பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ்.கே பிரசாத் விலகிய பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்