ரஹானே ‘வேறலெவல்’ ப்ளேயர்.. உங்களுக்குதான் கரெக்ட்டா ‘யூஸ்’ பண்ண தெரியல.. தேர்வுக்குழுவை விளாசி தள்ளிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஹானேவை அணியில் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஹானேவின் பெயர் இடம் பெற்றது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
சமீபத்தில் இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே ரஹானே எடுத்தார். கடைசியாக ரஹானே விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில் 2 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஹானே மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ரஹானே வெளிநாட்டு மைதானங்களில்தான் சிறப்பாக விளையாடக் கூடியவர். சொந்த மண்ணில் அவரின் ஆட்டம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். தேர்வுக்குழு அதிகாரிகள் முதலில் அவரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டு மைதானங்களில் ரஹானே இதுவரை 3000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் அவரின் சராசரி 41.71 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் 35.23 சராசரி மட்டுமே ரஹானே வைத்துள்ளார்.
குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரஹானே உள்ளார். இந்தப் புள்ளி விவரங்களை தேர்வுக்குழு அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு, அவரை வெளிநாட்டு மைதானங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்’ என எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு நல்லா தெரியும்.. டிராவிட் நிச்சயம் இதை செய்ய மாட்டார்’.. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்..!
- ‘நான் மட்டும் இல்ல, யாராலும் அவரை குறை சொல்ல முடியாது’!.. நிருபர் கேட்ட கேள்வி.. காட்டமாக பதிலளித்த கோலி..!
- என்னது அவருக்கு ‘Injury’-அ.. நம்புற மாதிரி இல்லையே..! பிசிசிஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
- ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பல வருசமா சொதப்பிட்டு இருக்காரு.. பேசாம அவரை தூக்கிட்டு ‘ஸ்ரேயாஸ் ஐயர்’-க்கு வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் அதிரடி..!
- அச்சுறுத்தும் ‘ஓமிக்ரான்’ வைரஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- உங்க பின்னாடி ஒரு பெரிய லைன் நிக்குது… ஜாக்கிரதையா ஆடுங்க..!- யாருக்கு சொல்றார் நம்ம ‘பாஜி’..?
- இந்த நேரத்துல நீங்க யார மிஸ் பண்றீங்க..?- “என் டீம் மேட்... ஆனா பெருசா வருத்தப்படலை”- என்ன சொல்ல வர்றீங்க ரஹானே..?
- இந்திய அணியில் களம் இறங்க போகும் ‘தமிழர்’.. உறுதி செய்த ரஹானே.. டெஸ்டில் நடக்க போகும் மாற்றங்கள்..!
- இந்த ப்ளானோட தான் இங்கிலாந்து வந்தோம்... ஆனா நடக்காம போயிருச்சு.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில துணைக் கேப்டனே ‘ஆப்பு’ வைக்கும் கோலி..!
- ‘அவர் எடுத்த முடிவு கரெக்ட்தான்’.. திடீர் அதிர்ச்சி கொடுத்த வீரருக்கு ஆதரவாக பேசிய ரஹானே..!