ஆஹா..! 8 வருசத்துக்கு முன்னாடி ஜடேஜாவை பத்தி தோனி போட்ட ஒரு ட்வீட்.. இப்போ ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜடேஜா குறித்து 8 வருடங்களுக்கு முன்பு தோனி பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். ஆரம்பமே இந்த கூட்டணி நல்ல தொடக்க கொடுத்தது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ரெய்னா, டு பிளசிஸ் உடன் கூட்டணி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அப்போது ஹர்சல் பட்டேல் ஓவரில் எதிர்பாராத விதமாக ரெய்னா (24 ரன்கள் - 3 சிக்சர், 1 பவுண்டரி) அவுட்டாகினார். அடுத்த பந்தில் டு பிளசிஸும் (50 ரன்கள்) அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றதால், சிஎஸ்கே வீரர்கள் ரன் அடிக்க சற்று திணறினர். இதன்காரணமாக மிடில் ஓவர்களில் ரன் ரேட் குறைய ஆரம்பித்தது. இதனால் 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்களை சென்னை அணி அடித்திருந்தது.

இந்த நிலையில் போட்டியின் கடைசி ஓவரை ஹர்சல் பட்டேலே வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா 5 சிக்சர்கள், 1 பவுண்டரி, 2 ரன் என 37 ரன்களை விளாசினார். இது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களை சென்னை அணி குவித்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதில் 4 ஓவர்களை வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தது மட்டுமல்லாமல் 1 ரன் அவுட் செய்தும் அசத்தினார். இதன்மூலம் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றிலும் தனது திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜடேஜா குறித்து தோனி பதிவிட்ட பழைய ட்வீட் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அதில், ‘ரஜினி சாருக்கு வயதாகிவிட்டதை கடவுள் உணர்ந்துவிட்டதால், அவர் ஜடேஜாவை உருவாக்கியுள்ளார்’ என ஜடேஜாவை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்