"அடுத்த வருஷம் இருக்கு சரவெடி..." மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... அப்டி என்ன நடந்துச்சு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பங்கேற்ற அனைத்து சீசனிலும் பிளே ஆப் சுற்றை எட்டியுள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்தான் முதல் முறையாக லீக் சுற்றோடு வெளியேறுகிறது.

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இந்த நிலைக்கு, மூத்த வீரர்களை கொண்ட சிஎஸ்.கே அணியும், திறமைக்கு ஏற்ப விளையாடாததுமே, குறிப்பாக கேப்டன் தோனியின் மோசமான ஃபார்மும்மே தோல்விக்கு காரணம்  என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என ரசிகர்கள் ஒருபுறம் தொடர் கோரிக்கைகளை எழுப்பி வருவதுடன், அவ்வாறே சென்னை அணி நிர்வாகமும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில்,  ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஒ) காசி விஸ்வநாதன் கூறுகையில், 2021- ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என நம்புவதாகவும், மூன்று ஐபிஎல் கோப்பைகளை தோனி வென்று தந்ததாகவும், நடப்பு போட்டித் தொடரை தவிர, அனைத்து ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல தகுதி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இது ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டதால், அனைத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. திறமைக்கு தகுந்தபடி நடப்பு தொடரில் சென்னை அணி சிறப்பாக ஆடவில்லை. அதே சமயம் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் விலகலும் அணிக்கு பின்னவாக அமைந்தது” என்றும் பேசினார். 







தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்களை சற்று வருத்தமடையச் செய்திருந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரியின் இந்த பதில் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்