‘தென் ஆப்ரிக்க தொடரிலும்’... ‘தோனிக்கு பதில்’... ‘இவருக்குதான் அதிக வாய்ப்பு’???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரிலும், இந்திய வீரர் தோனி இடம் பெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்திய தீவு தொடருக்கு பின், இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 டி-20, மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை, வரும் செப்டம்பர் 4-ம் தேதி பிசிசிஐ, தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் கடும் விமர்சனத்தையும் ஓரங்கட்டிய தோனி, தனது ஓய்வு முடிவு குறித்து மௌனம் காத்து வருகிறார். இதற்கிடையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரில், தோனிக்கு பதில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

அண்மையில் மேற்கிந்திய தீவு அணியை, அதன் சொந்தமண்ணில் 3-0 என வீழ்த்திய இந்திய அணியை, அப்படியே 2020 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயார் செய்யும் விதத்தில் பிசிசிஐ., இந்த முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 தொடருக்கு அதிரடியாக ஆடக் கூடிய மூன்று விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய உள்ளனர். அதில் ரிஷப் பந்த் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்ததாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளனர். 

எனினும் மேற்கிந்திய தீவு டி20 தொடரில், கடைசிப் போட்டியில் அரைசதம் அடித்து இருப்பதால், தென் ஆப்பிரிக்கா தொடரிலும் ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி ஓய்வு குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓய்வு என்பது வீரரின் தனிப்பட்ட முடிவு. அதில் தேர்வுக்குழு தலையிட உரிமையில்லை.

உலகக் கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு விளையாட எதுவாக அணி தரப்பில் மூன்று விக்கெட் கீப்பர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2020 உலகக்கோப்பை டி20 தொடருக்கான செயல்திட்டம் இப்போதே வகுக்கப்பட்டு வருகின்றது. அதில் ரிஷப் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்