‘டெலிவிஷன் தொடரை’... தயாரித்து வழங்கும் ‘தல தோனி’... 'வெளியான புதிய தகவல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி, டிவி தொடர் ஒன்றை தயாரித்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி, கடந்த உலகக் கோப்பைக்குப் பின்னர், கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் மட்டுமின்றி, இந்திய ராணுவத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்ட தோனி, இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியிலும் இருந்து வருகிறார். இதற்காக சமீபத்தில் 2 வார காலம் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவத்தில் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகள் தொடர்பான டிவி சீரியலை தோனி தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தொடரில் ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை, மக்கள் முன்னிலையில் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோ நெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ளது. தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த நிகழ்ச்சி, சோனி டிவியில் ஒளிபரப்ப  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இவரது முதல் டிவி நிகழ்ச்சி ஆகும்.

முன்னதாக தோனியின் வாழ்க்கை வரலாறு படமான M.S Dhoni: The Untold Story என்ற படம், 2016-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. மேலும் சூதாட்ட சர்ச்சையில் இருந்து சென்னை அணி மீண்டு வந்து, 2018-ம் ஆண்டு கோப்பையை வென்றது தொடர்பாக, ஹாட் ஸ்டார் சேனலில், Roar of the Lion, featuring Captain Cool himself என்ற ஆவணப் படத்தை தோனி தயாரித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, TV, SHOW, PARAMILITARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்