"'கிரிக்கெட்'ல இருந்து 'ரிட்டயர்டு' ஆயாச்சு"... இனி நம்ம அடுத்த 'இன்னிங்ஸ்' இது தான்..." வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார்.

கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இதனை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அனைவரிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடி வரும் நிலையில், இதன் பிறகு தோனி தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமா தயாரிப்பில் ஈடுபடுத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

'தோனி என்டர்டெயின்மென்ட்ஸ்' என்ற பெயரில் கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி ஆரம்பித்த நிலையில், 'Roar of the Lion' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருந்தார். தோனி தயாரிப்பு நிறுவனத்தின் எம்.டி (M.D)யான அவரது மனைவி சாக்ஷி, 'அறிமுக எழுத்தாளர் ஒருவர் எழுதி விரைவில் வெளியாகவுள்ள புத்தகத்தின் கதையை தழுவி வெப் சீரியஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாகும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 'இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல புதுமையான படைப்புகளை மக்களுக்கு வழங்கவுள்ளோம். தோனி பகுதி நேரமாக நிறுவனத்தை கவனித்துக் கொள்வார். மற்ற சமயங்களில், நான் கவனித்துக் கொள்வேன்' என கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ள நிலையில், தோனியின் கேப்டன்சி கடும் விமர்சனத்திற்கும் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்