"அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. போலீசில் புகார் கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியின் 18 மாத போராட்டம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக தோனி இருந்த சமயத்தில், சிறந்த அணியாக திகழ்ந்தது. அது மட்டுமில்லாமல், 2007 டி 20 உலக கோப்பை. 2011 ஐம்பது ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல ஐசிசி தொடர்களை தோனி தலைமையில் வென்று பல சாதனைகளையும் இந்திய அணி படைத்துள்ளது.

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி ஆடி வருகிறார்.

'மிஸ்டர் கூல்' மற்றும் 'தல' என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி, சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தனது பேஸ்புக் பக்கத்தில் தோனி பகிர்ந்த பதிவில், சில உற்சாகமளிக்கும் செய்திகளை நான் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன் என்றும் அனைவரும் அதில் பங்கேற்பீர்கள் என நினைக்கிறேன் என்றும் சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக, இது போன்று சர்ப்ரைஸ் ஒன்றை தோனி வைக்கிறார் என்றால், ஏதோ ஒரு புதிர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அதே போல, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு தொடர்பாக தோனி ஏதாவது அறிவிக்க போகிறாரா என்ற கோணத்திலும் ரசிகர்கள் பல கேள்விகளுடன் தோனியின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இதனால்,அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே தோனியின் பெயர், சமூக வலைத்தளங்களில் அதிகம் Trend ஆகவும் ஆரம்பித்திருந்தது.

அந்த வகையில், உற்சாகமான செய்தி தொடர்பாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தோனி கலந்து கொண்டார். அப்போது, Oreo பிஸ்கட் நிறுவனத்தின் புதிய Cookies ஒன்றை இந்தியாவில் Launch செய்து வைத்தார் தோனி. அது மட்டுமில்லாமல், உடன் வேறொரு தகவலையும் தோனி பகிர்ந்து கொண்டார்.

2011 ஆம் ஆண்டு, Oreo பிஸ்கட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்தது. அதே போல, இந்த ஆண்டு மீண்டும் Oreo Cookies இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதனால், இந்திய அணி டி 20 உலக கோப்பையை கைப்பற்றும் என்றும் தோனி குறிப்பிட்டிருந்தார்.

தோனியின் அறிவிப்பு தொடர்பாக ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தும் வருகின்றனர்.

Also Read | TVS வேணு சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.பிரேமா சீனிவாசன் காலமானார்..!

CRICKET, CSK, MS DHONI, தோனி, எம் எஸ் தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்