ரொம்ப நாள் கழிச்சு MS தோனி பகிர்ந்த வீடியோ.. கொஞ்ச நிமிசத்துலயே லட்சத்தை தாண்டிய லைக்ஸ்.. Viral!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. இவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, டி 20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தடயத்தை மறைச்சே ஆகணுமே".. ஷ்ரத்தா எலும்பை எடுத்து.. அஃப்தாப் செஞ்ச பதற வைக்கும் காரியம்!!

மேலும் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியாகவும் திகழ்ந்திருந்தது. சர்வதேச போட்டிகளில் ஒரு கேப்டனாக சிறந்த பங்காற்றிய தோனி, அதிலிருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் ஆடி வருகிறார்.

சர்வதேச அணியில் சிறப்பான கேப்டனாக தோனி இருந்தது போல, ஐபிஎல் தொடர்களிலும் சென்னை அணியின் கேப்டனாக வலம் வந்த தோனி தலைமையில், 4 முறை ஐபிஎல் கோப்பையை அந்த அணி கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். ஐபிஎல் நேரத்தில் தான் தோனியை கிரிக்கெட் மைதானத்திற்குள் அதிகம் பார்க்க முடியும் என்பதால், இந்த ஆண்டுக்கான தொடரையும் ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, அதிக நேரம் தனக்கு சொந்தமான நிலங்களில் ஏதாவது வேலைகளில் ஈடுபடுவார். அதே போல, சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவ் இல்லாமல் இருக்கும் தோனி, எப்போதாவது தான் சில பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது டிராக்டர் ஒன்றை தான் ஓட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

டிராக்டர் மூலம் நிலத்தை உழும் வீடியோ தொகுப்பை பகிர்ந்துள்ள தோனி, "புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டது" என குறிப்பிட்டுள்ளார். தோனி இந்த வீடியோவை பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இப்டி பண்றவங்கள உள்ளயே விடக்கூடாது".. ட்விட்டரில் ஆவேசமான IAS அதிகாரி.. கோதாவில் குதித்த நெட்டிசன்கள்!!

MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்