‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரண்டு புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி.
சவுதாம்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதமடித்தார். 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி இந்தியா உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் மூலம் தோனி 600 சர்வதேச இன்னிங்ஸில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வரிசையில் அவருக்கு அடுத்தபடியாக பவுச்சர் (596), சங்ககாரா (499), கில்கிறிஸ்ட் (485) ஆகியோர் உள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, 39.3ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோவை ஸ்டெம்பிங் செய்ததன்மூலம் தோனி 139 லிஸ்ட் ஏ ஸ்டெம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல் செய்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வரிசையில் சங்ககாரா (54), கில்கிறிஸ்ட் (52), தோனி (33), மெக்கலம் (32), பவுச்சர் (31) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிதான ஆட்டம், சாதனை புரிந்த ரோகித் சர்மா'... 'ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கேப்டன்'!
- இந்தியாவயே பெருமை பட வச்சீட்டயே ‘தல’.. இத யாராவது நோட் பண்ணீங்கலா?
- ‘ஒரு காலத்துல எப்டி இருந்த டீம்’.. இப்போ இந்த நிலைமைக்கு வந்திருச்சே! இந்த உலகக்கோப்பையின் மோசமான சம்பவம்!
- ‘கிங்’கோலி ஏன் பாஸ் கோவப்படுத்துறீங்..! ஆக்ரோஷப்படுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்?
- 'அது போன மாசம், இது இந்த மாசம்'... 'பும்ராவை கலாய்த்த சேவாக்'... வைரலாகும் ட்வீட்!
- ‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்..! வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ!
- ‘ஆரம்பமே அதகளம் பண்ணிய இந்தியா’.. அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டை தூக்கி தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட பும்ரா!
- 'எங்க போனாலும்'...'சென்னை'யை அடிச்சிக்க முடியாது மச்சி'...தெறிக்க விட்ட தினேஷ் கார்த்திக்!
- 'அவர ஓப்பனிங் பேட்ஸ்மேனா களமிறக்குங்க'... 'இல்லனா, மரத்தில் ஏறி பயங்காட்டிய ரசிகர்'!
- 'ஏம்பா கடைசியில இப்டி ஆகிடுச்சே'... 'அதிரடி காட்டிய ஐ.சி.சி.'!