கடைசி ஓவர போட ஏன் ‘பிராவோ’ வரல..? என்ன ஆச்சு அவருக்கு..? தோல்விக்கு பின் ‘தோனி’ சொன்ன விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி இன்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 185 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் அக்‌ஷர் பட்டேல் அடித்த 3 சிக்ஸர்கள் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தநிலையில் போட்டியை தலைகீழாக மாற்றிய கடைசி ஓவரை பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவுக்கு கொடுத்தற்கான காரணத்தை சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கியுள்ளார். அதில், ‘காயம் காரணமாக பிராவோ போட்டியின் பாதியில் வெளியே சென்றார். அவரால் மீண்டும் திரும்ப முடியவில்லை.

அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன் இருந்தது. ஒன்று கரண் ஷர்மா அல்லது ஜடேஜா. இதில் ஜடேஜாவை தேர்வு செய்தேன். அது போதுமானதாக இல்லை. ஷிகர் தவானின் விக்கெட் ரொம்ப முக்கியம். பலமுறை அவரது விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டோம்’ என தோனி தெரிவித்தார். டெல்லி அணிக்கு போட்டியில் அடைந்த எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்