2011 வேர்ல்ட் கப் Winning சிக்ஸரை அப்படியே ரீ கிரியேட் செஞ்ச தோனி.. தீயாய் பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த வின்னிங் சிக்ஸரை போலவே, வலைப் பயிற்சியில் தோனி சிக்ஸர் அடிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

2011 உலகக் கோப்பையை அத்தனை எளிதில் யாராலும் மறக்க முடியாது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தோனி - கம்பீர் நிகழ்த்தியது சந்தேகமே இல்லாமல் ஒரு அதிசயம். பார்த்தவர்களின் இதயத் துடிப்பை எகிற செய்த ஆட்டம். கடைசி ரன்னை சிக்ஸர் விளாசி  பூர்த்தி செய்து இந்தியாவுக்கு 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பையை வாங்கிக்கொடுத்தார் தோனி. அப்போதைய ரவி சாஸ்திரியின் கமெண்ட்ரியை கூட மனப்பாடமாக நம்மால் சொல்லிவிட முடியும். அந்த அளவுக்கு அந்த காட்சி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுடனும் ஒன்றிப்போய்விட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அதேபோல, வலைப் பயிற்சியின் போது சிக்ஸர் விளாசி இருக்கிறார் தோனி. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது.

இதில் குஜராத் வெற்றிபெற்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்த்து களமிறங்க இருக்கிறது சென்னை அணி. சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போதுதான் தோனி தன்னுடைய உலகக்கோப்பை வின்னிங் சிக்ஸரை பிராக்டீஸ் செய்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ள இந்த வீடியோவை இதுவரையில் 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய உலகக்கோப்பை அனுபவங்களை கமெண்டாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

 

MSDHONI, CSK, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்