பெயிண்டராக மாறிய தோனி.. சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் பெயிண்ட் அடித்து லூட்டி! வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது உலகளவில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையும் ஐபிஎல் தொடர் மீது தான் உள்ளது.

Advertising
>
Advertising

உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் அட்டவணை சில தினங்களுக்கு முன்னர்  வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணைப்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தரம்சாலா ஆகிய 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன.  52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக்  ஆட்டங்கள் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் அறிமுக போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன.

இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால், அனைத்து அணியில் உள்ள வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இதன் காரணமாக, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் குறித்த விஷயங்கள் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கேலரி ஸ்டாண்டுகளின் இருக்கைகளுக்கு மஞ்சள் & நீல நிற வண்ணம் அடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பணியில் தோனியும் கலந்து கொண்டு வண்ணம் பூசும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்