இந்த வருசத்தோட மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’ இதுதான்.. டி20 உலகக்கோப்பையில் ‘தல’ தோனியை பார்க்க போறீங்க.. ‘ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்’.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணி தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று (08.09.2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சஹார், அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ரிசர்வ் வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களான வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் பிசிசிஐ கொடுத்த இந்த சர்ப்ரைஸ், தோனியின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்