'ஐசிசி விருதுகளில்’... ‘இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆதிக்கம்’... ‘தோனி தான் இந்த 2 அணிகளுக்கும் கேப்டன்’... ‘தமிழக வீரருக்கும் இடம்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி வழங்கி உள்ள 10 ஆண்டு அணி விருதுகளில் முன்னாள் கேப்டன் தோனிக்கும், தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20, ஒருநாள், டெஸ்ட் அணிக்கான வீரர்களுக்கு வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் ஐசிசி கேட்டிருந்தது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அளித்த வாக்களிப்பின் அடிப்படையில் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் இருந்து ஒருவர் கூட சிறந்த டி20 அணியில் இடம் பெறவில்லை. இந்திய வீரர்கள் மட்டும் தோனி, ரோகித் சர்மா, பும்ரா, கோலி என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் கடந்த 10 ஆண்டுகளி்ல் சிறந்த ஒருநாள் அணிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் தோனி, ரோகித் சர்மா, கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணிக்கான கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் இந்திய அணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்