யாரும் எதிர்பார்க்காத தோனியின் 'Entry'?.. 'Waiting'லேயே வெறி ஏறுதே.. 'CSK' ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற மாறி 'சர்ப்ரைஸ்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யாரும் எதிர்பார்க்காத வகையில், தோனி கொடுக்கவுள்ள Entry ஒன்றைக் குறித்து, அசத்தல் தகவல் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertising
>
Advertising

கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!

15 ஆவது ஐபிஎல் போட்டியின் ஏலம் நடைபெற, இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே அதன் மீதான ஆர்வம், ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த முறை, எட்டு அணிகளுடன் நடைபெற்ற ஐபிஎல் போட்டி, இந்த முறை 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது.

புதிய ஐபிஎல் அணிகள்

இதற்காக, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள், ஐபிஎல் தொடரில் களம் காணவுள்ளது. இந்த இரு அணிகளும், ஏற்கனவே தலா 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தது. இதில், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணிக்கு கே எல் ராகுலும் கேப்டன்களாக செயல்படவுள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம்

மீதமுள்ள 8 அணிகளும், விதிகளுக்கு உட்பட்டு, 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். பத்து அணிகளும், மீதமுள்ள வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டி, ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டினை விட, முற்றிலும் மாறுபட்ட வகையில், அனைத்து அணிகளும் இந்த முறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளான் போடும் அணிகள்

அது மட்டுமில்லாமல், இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலர், கடந்த சில மாதங்களில் சிறந்த ஃபார்மில் உள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களை அணியில் சேர்க்கவும், கடுமையான போட்டி நிலவும் என்றும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, அனைத்து ஐபிஎல் அணிகளும் தற்போதே திட்டத்தினை வகுத்து வருகிறது.

சென்னை வந்த தோனி

அதிலும் குறிப்பாக, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில நாட்களாகவே ஐபிஎல் ஏலம் குறித்த பல்வேறு திட்டத்தினை வகுத்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் தோனி கூட இதற்காக வேண்டி, சில தினங்கள் முன் சென்னை வந்தடைந்தார்.

தோனி எடுக்க போகும் முடிவு?

இந்நிலையில், தற்போது தோனி குறித்த மேலும் ஒரு அசத்தல் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்த முறை நடைபெறவுள்ள ஏலத்தில், சென்னை அணியுடன் தோனியும் ஏலத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது தான் அது. இது பற்றி வெளியான தகவலில், அவரை சிஎஸ்கே நிர்வாகம், ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், தன்னுடைய முடிவை ஏலத்திற்கு முன்பாக தோனி அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கை மேல் பலன்

கடந்த சில ஆண்டுகளாகவே, சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை வைத்து, இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என தோனி குறிப்பிட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல், மிகவும் புத்திக் கூர்மையுடன் சிறந்த முடிவுகளை தோனி எடுத்து வருவதால், அவர் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வது, நிச்சயம் சென்னை அணியின் வீரர்கள் தேர்வுக்கு கை மேல் பலன் கொடுக்கும் என்றே தெரிகிறது.

இந்த தகவல் உறுதியாகி, தோனி ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டால், நிச்சயம் அவருடைய ரசிகர்கள், மிகுந்த உற்சாகத்தில் காணப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

அன்னைக்கி ரெயில்வே ஸ்டேஷன்'ல பிச்சை எடுக்கும் நிலைமை.. இன்னைக்கி அவங்க லெவலே வேற.. திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்

MS DHONI, IPL, IPL AUCTION, BENGALURU REPORTS, CSK, ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்