'10 பேர அடிச்சு 'டான்' ஆகல'...'நான் அடிச்ச 10 பேருமே 'டான்' தான் டா'...புதிய வரலாறு படைத்த 'தல'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது ஐபிஎல் வாழ்க்கையில் நேற்று புதிய சாதனையை படைத்து அசத்தினார்,தல என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்யை’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (23), ஸ்டோக்ஸ் (28) ஆகியோர் கைகொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அதிரடியாக ஆடக் கூடிய வாட்சன் சொதப்பலான துவக்கத்தை அளித்து வெளியேறினார்.இதையடுத்து களமிறங்கிய டுபிளசி (7), ரெய்னா (4) ஆகியோர் விரைவாக வெளியேற சென்னை ரசிகர்கள்அதிர்ச்சி அடைந்தார்கள்.பின்னர் களமிறங்கிய சென்னை கேப்டன் தோனி, ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்கள்.இதையடுத்து ராயுடு (57) அரைசதம் அடித்து வெளியேறினார்.கடைசி வரை தனியாளாக களத்தில் நின்ற தோனி 58 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து வந்த சாண்டனர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க,சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதோடு சென்னை அணியின் 'கேப்டன் தோனி' புதிய சாதனை ஒன்றையும் தனதாக்கினார்.நேற்றைய போட்டியின் வெற்றி மூலம்,'ஐபிஎல்' அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் தோனி.இதனை சென்னை ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சீண்டிய பஞ்சாப்பை சின்னா பின்னமாக்கிய மும்பை’.. ராகுல் சதத்தை காலி செய்த பொல்லார்ட்!
- ‘ஏன் இவ்ளோ வெறி’.. வைரலாகும் ரன் அவுட் வீடியோ!
- ‘மும்பையை அலறவிட்ட ராகுல்’..‘கடுப்பான பொல்லார்ட்’.. வைரலாகும் வீடியோ!
- ‘ஒரு டைம் இல்ல.. 2 டைம் இல்ல.. 3வது முறையும் கோலிதான்’.. அறிவிப்பை வெளியிட்டு அசத்திய விஸ்டன்!
- 'ஓல்டு ஒயின் போல'.. அவ்வளவு பக்குவம்.. நெகிழும் 'தல' தோனி!
- ‘சென்னையில மட்டும் இல்ல.. ஜெய்ப்பூரிலும் கிங்குதான்’.. ‘தோனி.. தோனி..’ காதைக் கிழித்த ரசிகர்களின் ஆரவாரம்!
- ‘உலகக் கோப்பை வர நேரம்பாத்தா இப்டி நடக்கணும்’.. பயிற்சியில் பலத்த காயமடைந்த அதிரடி வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘அதுக்கு பழகி இதுக்கு செட் ஆயிருச்சு’.. விமான நிலையத்தில், தரையில் படுத்து தூங்கும் தல!
- 'சென்னை மக்கள் இருக்காங்களே'...அப்படி என்ன 'சென்னை மக்களை' பத்தி 'தல' சொன்னாரு?
- 'பேச்சாடா பேசுன'...'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன'...3 நாளுல சந்திப்போம்னு சொன்னியே!