‘தோனி எனக்கு செய்த உதவி இருக்கே..! என்ன சொல்றதுன்னே தெரியல...’- உருகும் பிராவோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் அசைக்க முடியாத சொத்தாக இருந்தவர்.  கிரிக்கெட் வாழ்க்கையில் வெஸ்ட் இண்டீஸுக்காக பிராவோ எவ்வளவு சாதித்தாரோ, அதே அளவுக்கு சி.எஸ்.கே அணிக்காகவும் சாதித்து கெத்துக் காட்டியுள்ளார்.  இப்படியான சூழலில் தான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிராவோ.

Advertising
>
Advertising

டுவைன் பிராவோவை சென்னை அணி, வரும் ஐபிஎல் தொடரில் ரிட்டெய்ன் செய்ய முடியவில்லை. இருப்பினும் அவர் ஏலத்தில் பங்கேற்கும் போது எப்படியும் சென்னை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் சென்னை அணி நிர்வாகத்தால் ரிட்டெய்ன் செய்ய முடியாததை நினைத்துப் பெரிதாக வருத்தப்படவில்லை பிராவோ. மாறாக சென்னை அணி மீதும், தோனி மீதும் அவர் மிகுந்த மரியாதையே வைத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசுகையில், ‘நான் சென்னை அணியால் தக்கவைக்கப்படவில்லை தான். ஆனால் மீண்டும் விளையாட எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. எனவே ஏலத்தில் பங்கேற்பேன். அந்த ஏலத்தில் யார் என்னை எடுக்கிறார்களோ அவர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். எந்த அணியில் நான் இடம் பெறுவேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், விளையாடும் ஆர்வம் எனக்கு உள்ளது’ என்றார்.

தோனி பற்றி பேசுகையில், ‘நானும் தோனியும் வெவ்வேறு அம்மாக்களிடம் இருந்து பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்வோம். எங்கள் இருவருக்கும் இடையில் மிகவும் வலுவான நட்புறவு உள்ளது. அவர் கிரிக்கெட்டின் தூதராகவே பார்க்கிறேன். உலக அளவில் அவர் தூதர் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய உதவிகளை செய்துள்ளார்.

நாங்கள் இருவரும் இணைந்து சிஎஸ்கே அணிக்காக பலவற்றைச் சாதித்து உள்ளோம். வரலாற்றுப் பக்கங்களில் சிஎஸ்கே அணி இடம் பெறும்படி நாங்கள் பங்காற்றி உள்ளோம். இது சாத்தியமானது எங்கள் இருவருக்கும் இடையில் உள்ள நட்புறவு காரணமாகத் தான். அது தான் மிகவும் முக்கியமான விஷயமாகும்’ என்று தோனியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் பிராவோ. அதே நேரத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கும் உலகின் பல பிரான்சைஸ் தொடர்களில் விளையாடுவேன் என்றும் பிராவோ தெளிவுபடுத்தி உள்ளார்.

அவர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவது குறித்து, ‘கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவரின் கனவும், இந்தப் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது. டி10 ஃபார்மட் மூலம் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதி பெற முடியும். சீக்கிரமே ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்’ என்று ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

பிராவோ, விரைவில் தன்னுடைய சொந்த ஃபேஷன் பிராண்டை தொடங்க உள்ளார். அதில் தற்போது பிஸியாக இருக்கிறார்.

CRICKET, DHONI, BRAVO, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்