“வெய்ட்..வெய்ட்..வெய்ட் அவர் ஓவர்ல வேண்டாம்”.. எச்சரித்த ‘தல’ தோனி.. கடைசி நேரத்துல இவ்ளோ விஷயம் நடந்திருக்கா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் தோனி கூறிய அறிவுரை குறித்து பிஸ்டோரியஸ் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read  | முந்திரி காட்டில் கிடந்த இளம்பெண் சடலம்.. கனக்கச்சிதமாக ‘மோப்பநாய்’ நின்ற இடம்.. திடுக்கிட வைத்த தகவல்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 40 ரன்களும், ராபின் உத்தப்பா 30 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் தோனி 13 பந்துகளில் 28 ரன்களும், டுவைன் பிரிட்டோரியஸ் 14 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் போட்டியின் கடைசி கட்டத்தில் தோனி உரிய அறிவுரை டுவைன் பிரிட்டோரியஸ் பகிர்ந்துள்ளார் அதில், ‘நான் பும்ராவின் ஓவரில் அந்த ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்தேன். ஆனால் தோனி வெய்ட்..வெய்ட்..வெய்ட் என்று என்னை நிறுத்தினார். அதனால் நான் காத்திருந்தேன், அடுத்த ஓவரில், இப்போது நான் செல்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவரும் ஓகே என்றார்’ என டுவைன் பிரிட்டோரியஸ் கூறியுள்ளார்.

இப்போட்டியில் பும்ரா வீசிய 17-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சென்றது. அந்த ஓவரில் சிஎஸ்கே அணியின் டுவைன் பிரிட்டோரியஸ் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்றார். ஏற்கனவே 6 விக்கெட்டுகள் சென்றதால், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் புதிதாக களமிறங்குபவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் இதுபோன்ற ரிஸ்க்கான ஷாட்களை அடிக்க வேண்டாம் என தோனி எச்சரிக்கை செய்தார். அதன்படி அந்த ஓவரில் இருவரும் சிங்கிள்கள் மட்டுமே எடுத்தனர். இதனை ஆடுத்து மீண்டும் பும்ரா வீசிய 19-வது ஓவரில் டுவைன் பிரிட்டோரியஸ் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அதனால் அந்த ஓவரில் 14 ரன்கள் சென்று ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL, IPL2022, MS DHONI, DWAINE PRETORIUS, CSK VS MI, தோனி, டுவைன் பிரிட்டோரியஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்