என்னங்க ‘தல’ தோனி இப்படியொரு பதிலை சொல்லிட்டாரு.. ‘செம’ அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து தோனி கூறிய பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரில் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 52 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் சிஎஸ்கே (CSK) அணி இன்று (07.10.2021) தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து விளையாடுகிறது. துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 76 ரன்கள் அடித்துள்ளார். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் போட்டு முடிந்த பின் அடுத்த சிஎஸ்கே அணியில் விளையாடுவது தொடர்பாக கேப்டன் தோனியிடன் (Dhoni) வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், ‘அடுத்த ஆண்டு மஞ்சள் ஜெர்சியில் என்னை நீங்கள் பார்க்கலாம். ஆனால் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என்று தெரியாது. ஏனென்றால் நிலையில்லாத பல விஷயங்கள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் வரவுள்ளன. அதனால் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதிமுறைகள் என்னவென்று தெரியவில்லை.

எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரியவில்லை. அதனால் விதிமுறைகள் எதுவும் தெரியாமல் எந்த முடிவையும் இப்போது எடுக்க முடியாது. அதுவரை நாம் காத்திருப்போம். அனைத்தும் நன்றாக அமையும் என நம்புகிறேன்’ என தோனி கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவின் போது ஆன்லைனில் ரசிகர்களுடன் தோனி உரையாடினார். அப்போது, ‘என்னுடைய கடைசி ஆட்டம் சிஎஸ்கேவுக்காக சென்னையில் தான் விளையாடுவேன். அப்போதுதான் ரசிகர்கள் என் ஆட்டத்தை நேரில் காணவும், எனக்கு பிரியாவிடை கொடுக்கவும் வாய்ப்பு அமையும்’ என கூறியிருந்தார். இந்த நிலையில், தோனியின் இன்றைய பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்