‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..?’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமே 30ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் இருவரும் முதல்முதலாக விளையாடுகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய குல்தீப் யாதவ், “எனக்கும் சாஹலுக்கும் ஆடுகளத்திலும், அதற்கு வெளியேயும் நல்ல புரிதல் உள்ளது. மிடில் ஓவர்களில் இருவரும் எவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க முடியுமோ அவ்வளவு விக்கெட்டுகள் எடுத்து எதிரணி ரன் குவிப்பதைத் தடுப்போம். கோலி தலைமையில் அணி சிறப்பாக விளையாடி வருவதால் கண்டிப்பாக இந்த முறை உலகக் கோப்பையை வெல்லுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்துப் பேசிய குல்தீப், “நாங்கள் எப்போது சந்தேகம் என்றாலும் தோனியிடம் தான் செல்லுவோம். அவரிடம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கும். பவுலிங் செய்யும்போது சிறிது கடினமாக இருந்தாலும் தோனியைப் பார்த்தாலே போதும் அவரே வந்து உதவி செய்வார். எனக்கு மட்டுமல்ல எல்லா பவுலர்களுக்கும் அப்படிதான். பேட்ஸ்மேனின் உடல் மொழியை உடனே புரிந்து கொண்டு எப்படி பந்து வீச வேண்டுமென எங்களுக்கு உதவுவார்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசும்போது, “கோலி மற்றும் தோனி இருவரும் தான் அணியின் முதுகெலும்பு. தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். கோலி எங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’!.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்!
- ‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்!.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்?
- ‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து!
- 'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட்வைஸ்!
- ‘நீங்க பாக்கதான போறீங்க! கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’!.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்!
- ‘நாங்க இப்டிதான் உலகக்கோப்பைல விளையாடுவோம்’!.. ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றி கூறும் முன்னாள் வீரர்’!
- ‘பீல்டிங் பன்னுன 'தல' ஆரவாரப்படுத்திய ரசிகர்கள்’! ‘அதிர்ந்த ஓவல் மைதானம்’.. வைரலாகும் வீடியோ!
- 'என்னைக் குறிவைத்து அவர் சொல்லல.. அவர் வலி எனக்குத் தெரியும்'..நெகிழவைத்த வீரர்!
- 'அட என்னப்பா நீ.. அந்த ஷாட் எப்படி அடிக்கணும்னு நா சொல்றேன்'.. ரசிகர்கள் அட்வைஸ் குறித்து வீரர்!
- 'படிச்சவங்க, புத்தியுள்ளவங்க பேசுற பேச்சா இது?': முன்னாள் இந்திய வீரருடன் வார்த்தைப் போர்!