‘பயிற்சியை துவங்கிய தோனி’... ‘இந்திய ராணுவம் அளித்த புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, வரும் ஜூலை 31-ம் தேதி முதல் காஷ்மீர் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருந்து வருகிறார். இதனால் அவர் ராணுவத்தினருடன் சேர்ந்து, அவ்வப்போது கலந்துரையாடுவதுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய தோனி, அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெறப் போவதாக அறிவித்திருந்தார்.
மேலும் இதற்காக பாராசூட் ரெஜிமெண்டலில் தங்கி பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார். அதனை பரிசீலித்த இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், தோனியை 106- வது தரைப் படைப் பிரிவில் இணைத்துக்கொள்வதாக தெரிவித்தார். எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட்டுடன், கடந்த புதன்கிழமைன்று தோனி இணைந்தார்.
அங்கு அவர் இருமாத ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சகாத்தில் உள்ளனர்.
மற்ற செய்திகள்
‘கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்’... 'அதிரடியாக மீட்ட போலீஸ்'... பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி வீடியோ!
தொடர்புடைய செய்திகள்
- ‘டெஸ்ட தொடரில் தோனியின் 7-ம் நம்பர் ஜெர்சி’... ‘பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய தகவல்’!
- தோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா?.. வெளியான புதிய தகவல்..!
- 'அந்த ஒரு சம்பவம் போதும்'...அந்த செகண்ட்ல இருந்து 'தோனி ரசிகை'... மனம் திறந்த 'பாகிஸ்தான் நடிகை'!
- ‘தோனிக்கிட்ட, நான் எதிர்பார்ப்பது இதைத்தான்’... 'முன்னாள் கேப்டனின் விருப்பம்'!
- 'அந்த வெறி'.. 'அந்த நிதானம்'.. 'இதெல்லாம் கத்துக்கணுங்க'.. விண்டீஸ்க்கு எதிரான அணியில் இணைந்த வீரர்!
- ராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!
- கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..? பதிலளித்த தேர்வுக்குழு தலைவர்..!
- 'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!
- ‘இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள்’... ‘பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி அசத்தல்'!
- ‘தோனியின் பெயரில் வைரலான பேஸ்புக் பதிவு’... ‘உண்மை என்ன’?