#Definitelynot திடீர்னு ட்ரண்ட் ஆகும் ஹேஷ்டேக்… தோனி என்ன சொல்ல போகிறார்? காத்திருக்கும் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | IPL இறுதிப்போட்டியில் திடீர் மாற்றம்.. 30 நிமிஷம் லேட்டா தான் மேட்ச் ஆரம்பிக்கும்.. என்ன காரணம்..?

மோசமான சீசன்…

15-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் அவரின் தலைமையின் கீழ் தொடர் தோல்விகளை பெற்றதால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக, பின்னர் தோனியே தலைமையேற்று நடத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. அதனால் இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்வது முடியாத காரியமாகி விட்டது.

இன்றைய போட்டி…

இந்நிலையில் இன்று சி எஸ் கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுதான் இந்த சீசனில் சென்னை அணிக்கு கடைசி போட்டியாகும். அதனால் இந்த போட்டியில் வென்று வெற்றியோடு தொடரை முடிக்க ஆரவமாக இருக்கும். எதிர்த்து போட்டியிடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

திடீர்னு ட்ரண்ட் ஆன ஹேஷ்டேக்…

இந்நிலையில் இன்றைய போட்டியை முன்னிட்டு ரசிகர்கள் டிவிட்டரில் ‘definitely not’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும்போது தோனியிடம் இதுதான் உங்கள் கடைசி ஐபிஎல் தொடரா என்று கேட்டபோது, அவர் “definitely not” என்று கூறியிருந்தார். அதன் படி 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி சாம்பியன் பட்டமும் வென்று கொடுத்தார். இதனால் இந்த ஆண்டு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்ற கருத்துகள் எழுந்துள்ள நிலையில் தோனி இம்முறையும்” definitely not” என்று சொல்லவேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரண்ட் செய்துவருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, CSK, IPL 2022, MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்