மறுபடியும் தோனியால் தவறவிட்ட இந்தியா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயின் விக்கெட்டிற்கு ரி-வியூ கேட்காமல் விட்டது குறித்து தோனியை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று பிர்ன்மின்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 111 ரன்களும், ஜேசன் ராய் 66 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியனர். முதல் 10 ஓவர்களுக்கு இந்தியா அணியால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் போட்டியின் 11 -வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் 5 -வது பந்தை எதிர்கொண்ட ஜேசன் ராயின் கை க்ளவுஸில் பந்து பட்டு தோனியின் கைக்கு சென்றது.
இதனால் உடனடியாக இந்திய வீரர்கள் அவுட் என அம்பயரிடம் முறையிட்டனர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என மறுத்துவிட்டார். அதனால் ஹர்திக் பாண்ட்யாவும், கோலியும் ரி-வியூ கேட்கலாம் என தோனியிடன் கூறினர். ஆனால் தோனி வேண்டாம் என மறுத்துவிட்டார். ஆனால் ரி-வியூவில் பந்து கை க்ளோஸில் பட்டு செல்வது தெளிவாக தெரிந்தது. இதனால் அப்போது இந்திய அணி ஒரு விக்கெட் வாய்ப்பை இழந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’டீமுக்கு என்ன பண்ணனும்னு.. அவருக்குத் தெரியும்.. நாங்க நம்புறோம் அவர’ .. கோலி அதிரடி!
- 'அவர்மீது நம்பிக்கை வைத்த விராட் கோலி'... 'மறைமுகமாக தாக்கிய முன்னாள் வீரர்'!
- 'இந்த நிற ஜெர்சிதான் பெருமை - விராட் கோலி' ... 'கிண்டலடித்த ரசிகர்கள்'!
- ‘உலகக் கோப்பையில் பரபரப்பு..’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட இரு நாட்டு ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..
- ‘அவங்கதான் கவனமா ஆடணும் நாங்க இல்ல..’ அவரு விக்கெட் எனக்குத்தான்.. போட்டி குறித்து பிரபல வீரர் நம்பிக்கை..
- ‘மழையால் போட்டி நின்னு பாத்திருப்போம், இது புதுசால்ல இருக்கு’.. போட்டியின் நடுவில் நடந்த பரபரப்பு..!
- இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ..! வைரலாகும் போட்டோ!
- ‘இவங்கள ஜெயிக்கறவங்களுக்குத் தான் வேர்ல்டு கப்..’ பிரபல முன்னாள் வீரர் கருத்து..
- ‘இந்திய-பாகிஸ்தான் மோதிய ஆட்டம்’... 'புதிய வரலாறு படைத்தது'!
- ‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..