இந்திய ராணுவ முத்திரை இருக்கா? இல்லையா?.. வைரலாகும் தோனியின் புதிய க்ளவுஸ் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் விளையாடிய தோனியுன் கீப்பிங் க்ளவுஸில் ராணுவ முத்திரை இடம் பெற்றிருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இதுபோன்ற முத்திரையை பயன்படுத்துவது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என ஐசிசி நிர்வாகம் கூறியது. பின்னர் தோனியின் க்ளவுஸில் இருந்த இந்திய ராணுவத்தின் முத்திரையை அகற்ற வேண்டும் என பிசிசிஐ-க்கு ஐசிசி நிர்வாகம் அறிவுறித்தியது. இது தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாக குழு தலைவர், தோனியின் கீப்பிங் க்ளவுஸில் இடம் பெற்றிருந்த முத்திரை, விளம்பரத்தை குறிப்பதாகவோ அல்லது ஒரு மதத்தை குறிப்பதாகவோ இல்லை. அது இந்திய ராணுவத்தின் முத்திரைதான். அதானால் இதுதொடர்பாக ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் பிசிசிஐயின் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. அதானால் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தோனி இந்தியா ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தோனியின் கையுறை காண்ட்ரோவர்ஸியின் முடிவு இன்று தெரியும்'.. மனம் திறந்த இந்திய வீரர்!
- 'என்னா அடி??'.. காட்டுப்பய சார் இந்த வார்னர்.. மைதானத்திலேயே சுருண்ட வீரர்!
- ‘வைரலாகும் இங்கிலாந்து வீரரின் சதமடிக்கும் வீடியோ..’ ஆனாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க வேணாம்..
- ‘இந்திய வீரர்களுக்கு அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட்..’ உலகக் கோப்பையில் நெகிழ்ச்சி மொமென்ட்..
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல'...'தோனி'க்கு எதிராக...திட்டம் போட்ட 'பாகிஸ்தான்'... பரபரப்பு தகவல்!
- 'தோனி வீட்டு கதவை உடைத்து திருட்டு'... 'விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பல்'!
- இந்தியாவுக்கு எதிரானப் போட்டி... 'திட்டம் தீட்டிய பாகிஸ்தான் கேப்டன்'.. 'விளாசிதள்ளிய முன்னாள் பிரபல வீரர்'!
- காயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்..! மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘நீங்களே இப்படி பண்ணலாமா..?’ விராட் கோலிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்..
- ‘அவங்கல ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணனும்’.. ‘இல்லனா அவ்ளோதான்’.. முன்னெச்சரிக்கை விடுத்த சச்சின்!