"தோனி, ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் நடுவுல இப்டியும் ஒரு ஒற்றுமையும் இருக்கா?".. இது தெரியாம போச்சே.. வைரலாகும் மற்றொரு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதன் அரையிறுதி சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முன்னேறி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கையில கரண்டி விளையாடுதே.. சாண்ட்விட்ச் செய்யும் குட்டி செஃப்.. ..😍 க்யூட் வீடியோ.!
இதன் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பெத் மூனி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். மேலும் கேப்டன் மெக் லானிங் 49 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 31 ரன்களும் எடுத்திருந்தனர். மேலும் இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி, 28/3 என தடுமாறியது. பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்பிரீத் இடையேயான 69 ரன் பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. ஹர்மன்பிரீத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 52 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட போதிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பாக விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. கடைசியில் இந்திய அணி இலக்கை நெருங்கி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறவும் செய்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அதே வேளையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன் அவுட் இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் நடந்த 2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக அதே அரையிறுதி ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் ரன் அவுட் காட்சிகள், ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன் அவுட் காட்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இரண்டு ரன் அவுட்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், இந்த இரண்டு ரன் அவுட் மத்த்யில் மற்ற சில ஒற்றுமைகளும் உள்ளது. அதாவது, தோனி மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரின் ஜெர்சி நம்பர் '7' ஆகும். அவர்கள் இருவரும் 7 ஆவது வீரராக களமிறங்கி, அரையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆகி இருந்தார்கள். இது பற்றி அனைவரும் பேசி வந்தாலும் மற்றொரு ஒற்றுமையும் இதில் உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அதாவது, இருவரின் ரன் அவுட் புகைப்படங்களில் 77 என்ற நம்பரும் உள்ளது. தோனி ரன் அவுட்டான போது, நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்ஹோம் அருகே நிற்க, அவரது ஜெர்சி நம்பர் 77 ஆகும். அதே போல, ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டான போது அவர் அருகே நின்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி விக்கெட் கீப்பர் அலிஷா ஹேலியின் ஜெர்சி நம்பரும் 77 தான். இப்படி 7 என்ற எண்ணை சுற்றி இரண்டு அரையிறுதி போட்டிகளில் நடந்த சம்பவம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | எடைக்கு எடை தங்கம் தான் சீர்வரிசை..! மகள் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா ...
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவை எப்படியும் ஜெயிச்சே ஆகனும்.. ரொம்ப நாள் கழித்து ஆஸ்திரேலியா ODI அணியில் இடம் பிடித்த அதிரடி வீரர்.. முழு விவரம்
- முடிவுக்கு வந்த காத்திருப்பு.. இனி இவரு தான் கேப்டன்.. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அறிவிப்பு..!
- இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!
- 16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்த பென் ஸ்டோக்ஸ்.. ஐபிஎல் ஆடுவது பற்றி வெளியான தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
- "எப்புட்றா விக்கெட்டை பறிகொடுக்கலாம்னு கிரவுண்ட்க்கு வராங்க".. - ஹர்பஜன் சிங்..!
- "சென்னை சேப்பாக்கத்துல தோனியும் ஜடேஜாவும் கால் வச்சா போதும் விசில் பறக்கும்" ..சின்ன தல ரெய்னா உருக்கம்..!
- மேட்ச் நடுவே ரசிகர்கள் கத்திய "வார்த்தை".. அடுத்த நிமிஷமே சிக்னல் கொடுத்து மாத்த வெச்ச கோலி!!.. வைரல் வீடியோ!!
- பாத்ரூம்ல கண்ணீர் விட்டு அழுத தினேஷ் கார்த்திக்..!? KL ராகுல் பற்றி பேசும்போது உருக்கம்..
- "CSK வின் பழைய ரெக்கார்ட பாருங்க.. அவங்க கோட்டை அது".. ஆரூடம் சொன்ன கவுதம் கம்பீர்..!
- "கோலியோட ஃபார்முலாவை தான் ரோஹித்தும் பின்பற்றுகிறார்" - கேப்டன்சி பற்றி பேசிய கவுதம் காம்பீர்..!