மீசைக்கார நண்பா.. உனக்கு ரோஷம் அதிகம் டா.. வைரலாகும் தோனி -யுவராஜ் லேட்டஸ்ட் படம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மீசைக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா.. அந்த கட்டாக் மைதானத்தை கேட்டு பாரு..  அடி வெளுத்த கதை.. அது சொல்லும், அந்த வான்கடே மைதானத்தை கேட்டுப்பாரு, உலக கோப்பை வாங்கிய கதையை அது சொல்லும் என்ற ரீதியில் தோனி யுவராஜ் சந்திப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் தோனியுடன் இருக்கும் படத்தை யுவராஜ் சிங் பகிர்ந்ததே காரணம்.

மீசைக்கார நண்பா.. உனக்கு ரோஷம் அதிகம் டா.. வைரலாகும் தோனி -யுவராஜ் லேட்டஸ்ட் படம்
Advertising
>
Advertising

தோனி- யுவராஜ் சந்தித்த புகைப்படத்தை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஸ்டோரிஸ்’ ஆக போஸ்ட் செய்திருந்தார். இந்த இரு லெஜெண்ட்களும் எதற்காக சந்தித்துக் கொண்டனர் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்தப் புகைப்படத்தை வைரல் ஆக்கினர். யுவராஜ் சிங் இனி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்-க்காக தொடர்ந்து விளையாட உள்ளார்.

MS Dhoni and Harbhajan Singh meets together, picture gets viral

ஒரு சோபாவில் தோனி- யுவராஜ் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்தப் புகைப்படத்தில் தோனியை டேக் செய்து ‘பூமராங்’ எஃபெக்ட்-ல் பகிர்ந்துள்ளார் யுவராஜ். இருவரும் இணைந்து நடித்துள்ள ஒரு விளம்பரப் படத்துக்கான படப்பிடிப்பிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தோனி மற்றும் யுவராஜ் என இருவருக்குமே அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் புகைப்படம் வெளியானதும் வைரல் ஆகியுள்ளது.

தோனி- யுவராஜ் ஆகிய இருவரும் இணைந்து கடைசியாக விளையாடியதில் மறக்க முடியாத போட்டி ஆக இந்தியா- இங்கிலாந்து ஒரு நாள் போட்டி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் போட்டி நடந்தது. இதில் யுவராஜ் (127 பந்துகளுக்கு 150 ரன்கள்) மற்றும் தோனி (122 பந்துகளுக்கு 134 ரன்கள்) என இவர்களின் கூட்டணி மட்டும் 256 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர்.

தோனி விரைவில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரசிகர்களுக்கு காட்சி அளிப்பார். யுவராஜ் சிங் அநேகமாக டி20 போட்டித் தொடர் ஒன்றில் வருகிற பிப்ரவரி மாதம் பங்கேற்பார் எனத் தெரிகிறது. யுவராஜ் தனது ஓய்வை அறிவித்திருந்தாலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடக்க உள்ள டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

CRICKET, MSDHONI, YUVRAJ SINGH, தோனி, யுவராஜ் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்