IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், நேற்று (29.05.2022) முடிவடைந்திருந்த நிலையில், புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
Also Read | ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கி இருந்தது.
இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பத்தில் இருந்தே தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தது.
லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த குஜராத் அணி, முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதன் பின்னர், இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான், குஜராத் அணியை மீண்டும் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 130 ரன்கள் மட்டுமே எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி நிதானமாக ஆடி, 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டிப் பிடித்தது.
முதல் ஐபிஎல் சீசனையே வெற்றி சீசனாக மாற்றியுள்ள குஜராத் அணியை கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே போல, ஹர்திக் பாண்டியாவின் தலைமை குறித்தும், பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான விளம்பரம் ஒன்றில், தோனி தெரிவித்துள்ள கருத்தினை குறிப்பிட்டு, குஜராத் அணி வெற்றி குறித்த சுவாரஸ்ய விஷயம் ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஐபிஎல் தொடர் என்றாலே, பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படுபவை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
மும்பை 5 முறையும், சென்னை அணி 4 முறையும் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. ஆனால், நடப்பு தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள், கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தது. இதில், ஒரு அணியாவது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில், இந்த முறை அது நிகழவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தோனி நடித்திருந்த விளம்பரம் ஒன்றை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.
அதில் வரும் விளம்பரம் ஒன்றில், "இங்க Blue (மும்பை) மற்றும் Yellow (சென்னை) மட்டும் தான் வெடிக்கும்ன்னு நெனச்சீங்களா?. இங்க எது வேணா வெடிக்கலாம்" என குறிப்பிட்டிருப்பார். அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகள் மும்பை (3 முறை) மற்றும் சென்னை (2 முறை) அணிகள் தான் கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.
ஆனால், இந்த முறை எந்த அணிகள் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதைத் தான் தோனி அப்படி குறிப்பிட்டிருப்பார். அவர் விளம்பரத்தில் குறிப்பிட்டதை போலவே, சென்னை மற்றும் மும்பை அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற, பெங்களூர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதில், குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது ஒன்னு போதும்.. மனசுல நின்னுட்டீங்க’.. முக்கிய விக்கெட்டை எடுத்துட்டு பாண்ட்யா கொடுத்த ரியாக்ஷன் வைரல்..!
- ‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!
- "எல்லாரும் என்ன பட்லர் 'Wife'ன்னு நெனச்சுட்டாங்க, ஆனா.." பிரபல வீரரின் மனைவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
- "மீண்டும் மீண்டுமா??.." ஒரு Ball போட்ட உடனே.. மைதானத்தில் அரங்கேறிய சம்பவம்.. கொஞ்ச நேரத்தில் நடந்த 'ட்விஸ்ட்'
- "ஐபிஎல் ஆடுறதுக்காக கல்யாணத்தையே மாத்தி வெச்சுட்டாரு.." இளம் வீரர் எடுத்த முடிவு.. வெளியான சுவாரஸ்ய தகவல்
- Level 1 விதிமீறலில் ஈடுபட்ட பிரபல வீரர் ? … இன்னைக்கு ரெண்டாவது Qualifier … கண்டித்த பிசிசிஐ.. பரபரப்பு தகவல்
- கோலி'ய பாத்து வேகமா ஓடி வந்த ரசிகர்.. மறுகணமே நடந்த பரபரப்பு.. "அப்போ விராட் குடுத்த ரியாக்ஷன பாக்கணுமே"
- ஆத்தீ.. என்னா கோவம்.. தோல்வியால் அதிருப்தி.. வைரலாகும் கம்பீர் போட்டோ..!
- “அவர் மட்டும் இல்லைன்னா 2007-லயே என் டெஸ்ட் கேரியர் முடிஞ்சிருக்கும்”.. முன்னாள் கேப்டன் செய்த உதவி.. உருக்கமாக பேசிய சேவாக்..!
- ‘யாருப்பா அந்த பையன்?’.. அம்பயர் அவுட் கொடுக்குறதுக்கு முன்னாடியே வெளியேறிய வீரர்.. பாராட்டும் ரசிகர்கள்..!