'அவங்க ஆசையே இதான்.. நான் ஆடுவேன்!'.. தாயின் இறப்புக்கு கூட செல்லாமல் டெஸ்ட்க்கு தயாராகும் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெற்ற தாயின் இறுதிச் சடங்குக்கு கூட போகாமல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கி ஆடவுள்ளார் 16 வயது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா.

முன்னதாக ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் மிரட்டிய இவரது இருப்பு அணிக்கு புதிய ஊக்கத்தை தந்துள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.  பாகிஸ்தானில் உயர்நிலைப் பள்ளித் தேர்வினை முடித்த நசீம் ஷா ஆடியது 6 முதல் தர ஆட்டங்கள்தான் என்றாலும், இவரது ஸ்விங் முறையிலான திறமான பந்துவீச்சினால், வரும் வியாழன் அன்று தொடங்கப்படவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கான பயிற்சியில் நசீம் ஷா இருந்த போதுதான் அவரது தாய் திடீரென உடல் நலம் குன்றி உயிரிழந்தார். உடனே அவர் ஊருக்கு செல்வதற்கான நடவடிக்கை எடுத்தும் தனது தாயின் விருப்பமே தேசிய அணிக்காக விளையாடுவதுதான் என்பதால், தாயின் இறப்புக்கு கூட செல்லாமல் விளையாடுவேன் என்று நசீம் ஷா கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தில் இறந்தவர்களை 24 மணி நேரத்தில் அடக்கம் செய்துவிடுவார்கள் என்பதால், ஆனால் நசீம் ஷா செல்வதற்கு 2 நாட்கள் ஆகும் என்பதாலும் நசீம் ஷா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். எனினும் இந்த நேரத்தில் மற்ற வீரர்கள் அவருக்கு ஆறுதலாக, அவரது மன உறுதிக்கு துணை நிற்கின்றனர்.

NASEEMSHAH, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்