செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2019-ம் ஆண்டு முழுக்க இந்தியர்கள் அதிகளவில் தேடிய விஷயங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் டாப் 10 மனிதர்கள் பட்டியலில் 2 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். ஓய்வு முடிவை அறிவித்தததால் யுவராஜ் சிங்கை இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடி இருக்கின்றனர். இதற்கு அடுத்து இளம்வீரரும், அடுத்த தோனி என கூறப்படுவருமான ரிஷப் பண்டினை இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

உலகக்கோப்பைக்கு முன் பண்டுக்கு டீமில் இடம் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். உலகக்கோப்பை போட்டிக்குப்பின் தொடர்ந்து சொதப்புவதால் கடும் விமர்சனங்களை பண்ட் எதிர்கொண்டு வருகிறார். ஒரே ஆண்டில் புகழ், வீழ்ச்சி என இரண்டையும் அதிகளவில் சந்தித்த பண்டினை ரசிகர்கள் கூகுளில் போட்டிபோட்டு தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கிரிக்கெட் உலகில் அதிக புகழ்வாய்ந்த தோனி, ரோஹித், விராட் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 மனிதர்கள்:-

1. அபிநந்தன் வர்த்தமான்

2. லதா மங்கேஷ்கர்

3. யுவராஜ் சிங்

4. ஆனந்த் குமார்

5. விக்கி கவுஷல்

6. ரிஷப் பண்ட்

7. ரேணு மோண்டல்

8. தாரா சுதாரியா

9. சித்தார்த் சுக்லா

10. கோனே மித்ரா 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்