மீளாத வேதனையுடன் திரும்பும் போர்ச்சுக்கல்.. காலிறுதி அதிர்ச்சியால் கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

கத்தாரில் நடந்து வரும் கால்பந்து தொடர் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஏராளமான எதிர்பாராத முடிவுகள் கூட இந்த தொடரில் அரங்கேறி இருந்தது.

அர்ஜென்டினா அணியை சவூதி அரேபியா வீழ்த்தி இருந்தது, மொரோக்கோ அடுத்தடுத்து வெற்றி பெற்று காலிறுதி வரை முன்னேறி இருந்தது என பல போட்டிகளின் முடிவுகள், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் ஸ்பெயின் அணி கூட மொரோக்கா அணியுடன் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது. அதே போல, பிரேசில் அணியும் குரோஷியா அணியுடன் பெனால்ட்டி ஷூட் சுற்றில் தோல்வி அடைந்து காலிறுதி சுற்றுடன் வெளியேறி அந்த அணி ரசிகர்களை கண்ணீர் விடவும் செய்திருந்தது. இந்த உலக கோப்பை கால்பந்து தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரேசில் கருதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு முடிவு தான், தற்போது 3 ஆவது காலிறுதி போட்டியிலும் நடந்துள்ளது.

மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் மோதி இருந்த இந்த போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ ஆடும் லெவனில் களமிறங்கப்படவில்லை. தொடர்ந்து, நடந்த போட்டியில் மொராக்கோ அணி அனைத்து ஏரியாவிலும் பூந்து விளையாடியது. 42 ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த மொராக்கோ அணி, அதன் பின்னர் போட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

இரண்டாம் பாதியில், ரொனால்டோ மீண்டும் உள்ளே வந்த போதும் அவரை கோல் அடிக்க விட முடியாமல் சிறப்பாக தடுத்து நிறுத்தியது மொராக்கோ அணி. இறுதியில், 1 - 0 என்ற கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேற, போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

கால்பந்து போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தோல்வி அடைந்ததும் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறித் துடித்திருந்தார். வெளியேறும் போது கூட, அவர் கண்ணீருடன் தான் மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தார். இது ரொனால்டோ ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி இருந்தது. அதே போல, தற்போது 37 வயதாகும் ரொனால்டோ, அடுத்த கால்பந்து உலக கோப்பை தொடரில் ஆடுவாரா என்பது பற்றியும் ரசிகர்கள் வேதனையுடன் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

CHRISTIANO RONALDO, FIFA WORLD CUP 2022, MOROCCO, PORTUGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்