'இந்திய' ரசிகர்கள் பற்றி.. 'கிண்டல்' அடித்த 'மோர்கன்', 'பட்லர்'?!.. திடீரென வைரலாகும் 'ட்வீட்கள்'.. "இவங்க மேலயும் 'நடவடிக்கை' எடுங்க.." கொதித்து எழுந்த 'ரசிகர்கள்'.. 'சர்ச்சை' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இதன் முதல் போட்டி, தற்போது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்காக, இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.

தான் கால் தடம் பதித்த முதல் சர்வதேச போட்டியில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்ற ராபின்சனுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், பாலியல் மற்றும் இனவெறி தொடர்பாக ராபின்சன் செய்த ட்வீட்கள், அவர் கிரிக்கெட் உலகில் அசத்தலான அறிமுகத்தை பெற்ற சமயத்தில் வைரலானதால், அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது.

இதன் காரணமாக, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் செய்த பழைய ட்வீட்கள், தற்போது வைரலாகி மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து அணியின் டி 20 கேப்டனான இயான் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த சில அழிக்கப்பட்ட ட்வீட்களின் ஸ்க்ரீன் ஷாட்கள், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, இயான் மோர்கன், 'Sir you’are my favourite batsman' என சரியாக ஆங்கிலம் பேச வராத இந்தியர்களை போல ட்வீட் செய்திருந்தார். இதற்கு பிரண்டன் மெக்கல்லம், ஜோஸ் பட்லரை டேக் செய்து, 'josbuttler Sir, you play very good Opening batting' என ட்வீட் செய்துள்ளார்.


அதே போல, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜோஸ் பட்லர், 'Well done on double 100 much beauty batting your on fire sir' என்றும், 'I always reply sir no.1 else like me like u' என்றும் இந்தியர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்ய, அது தற்போது கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பட்லர், மோர்கன் ஆகியோரின் நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. ஆனால், அதே வேளையில், இந்தியர்கள் பலர், இது பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர்.

 





8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ட்வீட்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட இந்த ட்வீட்கள் பற்றி, இங்கிலாந்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், நிச்சயம் மோர்கன் மற்றும் பட்லருக்கு, அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்