‘இது லிஸ்ட்லேயே இல்லையேப்பா!’- நியூசிலாந்தை திடீர் சூறாவளியாக ‘அடிச்சுத்தூக்கிய’ முகமது சிராஜ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இரு அணிகளுக்கும் இடையில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே நடந்தது. முதல் போட்டி த்ரில்லான சூழலில் டிராவான நிலையில், இரண்டாவது போட்டி நான்கு நாட்களுக்கு முன்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்தது முதல் இந்திய அணி, நியூசிலாந்தை பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பந்தாடியது. குறிப்பாக இந்தியாவின் தொடக்க வீரர்களில் ஒருரவரான மயான்க் அகர்வால், முதல் இன்னிங்ஸில் சதமடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் அரைசதம் கண்டார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

அதேபோல ஆட்டத்தின் முதல் மற்றும்  இன்னிங்ஸ்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் டெஸ்ட்டிலும் அஷ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் அசத்தலான பந்து வீச்சு காரணமாக தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்படி பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பலர் சாதித்திருந்தாலும், இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த தொடரில் திரும்பிப் பார்க்க வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மட்டும் தான்.

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்டுகளை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்து, நியூசிலாந்து மிகப் பெரும் அழுத்தம் கொடுத்தார் சிராஜ். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் வெளி வருவதற்கு முன்னரே இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மண்ணைக் கவ்வ வைத்தனர்.

மற்ற வேகப் பந்து வீச்சாளர்கள் மும்பை மைதானத்தில் திணறிய போது தான் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது என்பது குறித்து முகமது சிராஜ், ‘நான் இந்த தொடருக்கு முன்னர் சிங்கிள் ஸ்டம்ப் வைத்து பயிற்சி மேற்கொண்டிருந்தேன். பந்தை அவுட்-ஸ்விங்க் செய்வதில் என் முழுக் கவனத்தையும் செலுத்தினேன். நான் என் வாய்ப்புக்காக தொடர்ந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு காத்திருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன், தொடர்ந்து அவுட்-ஸ்விங்க் பந்துகளை வீச வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். என் பவுலிங்கிற்கு என்று ஒரு ரிதம் உள்ளது. அதை அடைந்து, அதன்படி பந்துவீச வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன்.

இரண்டாவது டெஸ்டைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படியும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இதனால் 3 அல்லது 4 ஓவர்களுக்கு மேல் எனக்கு கிடைக்காது என்பதையும் புரிந்து கொண்டேன். எனவே எனக்கு எவ்வளவு குறைவான ஓவர்கள் கொடுத்தாலும் அதில் என் திறனைக் காட்டி விட வேண்டும் என்று நினைத்தேன். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் கொடுத்தாலும் அதிலும் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என எண்ணினேன்’ என்று விளக்கினார்.

CRICKET, MOHAMMED SIRAJ, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்