"அப்பா இறந்த பிறகு ரூம்ல தனியா அழுதுட்டே இருந்தேன்.. அவங்க 2 பேர் தான் ஆறுதலா இருந்தாங்க".. முகமது சிராஜ் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மறைந்த தனது தந்தை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | அப்புறம் என்னப்பா கப் நமக்கு தான்னு அறிவிச்சிடலாமா?.. பிராவோ-வின் மாஸ் என்ட்ரி.. வீடியோ..!

முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது சிராஜ். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதற்கு முந்தைய ஆண்டு ஒரு நாள் போட்டியிலும் 2017 ஆம் ஆண்டு டி20 போட்டியிலும் சிராஜ் அறிமுகம் ஆகியிருந்தார். இதுவரையில் 18 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளிலும் சிவராஜ் விளையாடி இருக்கிறார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 38 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

சோகம்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராக சிராஜ் அறியப்படுகிறார். எளிமையான பின்புலத்திலிருந்து கஷ்டப்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்த சிராஜ் தனது தந்தை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். கடந்த 2020 21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற கவாஸ்கர் பார்டர் தொடரில் பங்கேற்று இருந்த இந்திய அணியில் முகமது சிராஜும் இடம் பெற்றிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

கொரோனா காலம் என்பதால் வீரர்கள் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர். ஒருவர் மற்றொருவரின் அறைக்கு செல்லக்கூடாது என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் அமலில் இருந்தது. அப்போது சிராஜுன் தந்தை முகமது காஸ் மரணம் அடைந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. துரதிஷ்டவசமாக அவரால் உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை.

கண்ணீர்

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சிராஜ், "அது மிகவும் கடினமான காலகட்டம். பயிற்சியாளர் ஸ்ரீதர் எனக்கு அடிக்கடி போன் செய்து சாப்பிட்டாயா? என்ன சாப்பிட்டாய்? ஒழுங்காக தூங்கினாயா? என அன்பாக விசாரிப்பார். அவரைப் போலவே எனது வருங்கால மனைவியும் போன் செய்து என்னை பற்றி அடிக்கடி விசாரிப்பார். அவர்களிடம் நான் அழுதது கிடையாது. ஆனால் எனது அறையில் அழுது கொண்டே இருப்பேன். எனது தந்தை இறந்த அடுத்த நாள் நான் பயிற்சிக்காக மைதானத்திற்கு சென்றேன்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது எனது அருகில் வந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'உன்னுடைய தந்தையின் ஆசி எப்போதும் உன்னுடன் இருக்கும். இந்த தொடரில் நீ ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவாய்' என கூறினார். அவர் சொன்னது போலவே 5 விக்கெட்டுகளை நான் எடுத்திருந்தேன். போட்டி முடிவடைந்த பிறகு என்னிடம் வந்து அவர் நான் சொன்னதைப் போலவே நடந்து விட்டது அல்லவா என கேட்டுச் சென்றார். அவை மறக்க முடியாத நாள்கள்" என கூறியுள்ளார்.

Also Read | பல நாள் பிரச்சனை... ஒரே போன்காலில் தீர்த்து வச்ச சபாநாயகர் அப்பாவு.. ஆன் தி ஸ்பாட்டில் அதிரடி..!

CRICKET, MOHAMMED SIRAJ, FATHER DEMISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்