தோனிக்கு கோலி சொன்ன ‘அதே’ வார்த்தை.. இப்போ அதை விராட்டுக்கு சொன்ன சிராஜ்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி ஓய்வு பெறும்போது விராட் கோலி கூறிய வார்த்தைகளை முகமது சுராஜ் கூறி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

விராட் கோலி சில தினங்களுக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். திடீரென இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முகமது சிராஜ், விராட் கோலிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னுடைய சூப்பர் ஹீரோ நீங்கள்தான். நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி என்ற ஒரு சொல் போதாது. எப்போதும் நீங்கள் என்னுடைய சகோதரராகவே இருப்பீர்கள். இத்தனை ஆண்டு காலமாக என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. என்னுடைய மோசமான நிலையில் கூட என்னிடமிருந்த சிறப்பான திறனை கண்டறிந்தவர் நீங்கள்தான். எப்போதுமே நீங்கள் தான் என்னுடைய கேப்டன், கிங் கோலி என முகமது சிராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அப்போது, ‘எப்போதுமே நீங்கள்தான் என் கேப்டன்’ என விராட் கோலி கூறியிருந்தார். இதே வார்த்தையை தற்போது விராட் கோலிக்கு முகமது சிராஜ் கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானபோது சற்று மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். முதல் போட்டியிலேயே 4 ஓவர்களை வீசி 50 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்தார். அதனால் அவர் மீது அப்போது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட மீண்டும் அவருக்கு விராட் கோலி அணியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார்.

இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சார்பாகவும் முகமது சிராஜ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களிலும் ஆரம்பத்தில் முகமது சிராஜ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவருக்கு விராட் கோலி தொடர்ந்து வாய்ப்பளித்துக் கொண்டே இருந்தார். இதனை அடுத்து தனது திறமையை வளர்த்துக் கொண்ட முகமது சிராஜ், தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, VIRATKOHLI, MOHAMMEDSIRAJ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்