'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முகமது ஷமியின் மனைவி தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு வேண்டுமென நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மனைவி ஹாசின் ஜஹானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஹாசின் ஜஹான் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய அந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளதாகவும், கொலை செய்து விடுவோம் எனவும், பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் எனவும் மோசமான முறையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக  அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காததால் தற்போது அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுகுறித்த அவருடைய மனுவில், "இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்