‘நீங்க வேறலெவல் பாஸ்’.. கோலி அரைசதம் அடிச்சதும் ஷமி செஞ்ச செயல்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி அரை சதம் அடித்ததும் முகமது சமி செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய (30.04.2022) 43-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 58 ரன்களும், ரஜத் படிதார் 52 ரன்களும், மேக்ஸ்வெல் 33 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியை பொறுத்தவரை பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளும், முகமது சமி, ரஷித் கான், லாக்கி பெர்குசன் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அரை சதம் அடித்ததும், குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அவரது தோளில் தட்டி வாழ்த்து தெரிவித்தார். முகமது சமியின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதில் தொடர்ந்து 2 முறை டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய போட்டியில் அவர் அரைசதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்போட்டியில் முகமது சமி வீசிய 17-வது ஓவரில் விராட் கோலி அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டியின் ஆல்டைம் சிறந்த லெவன்.. முன்னாள் வீரரின் அசத்தல் தேர்வு.. அட, கேப்டன் இவரு தானா?
- “நீங்க தோனி ரசிகரா இருந்தா.. இதை முதல்ல அவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க”.. ரிஷப் பந்துக்கு சேவாக் முக்கிய அட்வைஸ்..!
- “இத்தனை கோடி கொடுத்து எடுத்ததுக்கு செம வொர்த்”.. இளம் வீரரை தாறுமாறாக பாராட்டிய சேவாக்..!
- அப்படி போடு..மேக்ஸ்வெல் - வினிராமன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செம்ம டான்ஸ் ஆடிய விராத் கோலி!
- விமர்சனத்தை சந்திக்கும் 'கோலி'யின் ஃபார்ம்.. "இத மட்டும் நீங்க திருப்பி பண்ணிட்டீங்க, அப்பறம் பாருங்க.." யுவராஜ் சிங் கொடுத்த செம 'அட்வைஸ்'!!
- “பாதி சம்பளத்தை கூட கழிச்சிக்க சொல்லுங்க.. உடனே IPL-ல இருந்து நீங்க விலகணும்”.. விராட் கோலிக்கு வந்த முக்கிய அட்வைஸ்..!
- யாருங்க இந்த பையன்?.. தனி ஒருவனாய் GT அணியை மரண காட்டு காட்டிய SRH பவுலர்..!
- First Half போட்டியில் டாப் கியர்.. Second Half'ல ரிவர்ஸ் கியர்.. "RCB-யின் பின்னடைவுக்கு காரணங்கள் இதுவா??..
- ‘அப்படி போடு’.. முதல்ல ஹர்பஜன் சிங், இப்போ நம்ம அஸ்வின்.. வேறலெவல் சம்பவம்..!
- "டீம்'ல எடுக்குறேன்னு நம்ப வெச்சு.." 4 வருடம் முன்பு நடந்த சம்பவம்.. வேதனையுடன் பகிர்ந்த பிரபல 'RCB' வீரர்!