"ஷமியா இப்டி ஒரு பால் போட்டது?".. ஒரு நிமிஷம் குழம்பி நின்ன கோலி, புஜாரா... என்ன நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது 2 ஆவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு பண்ணிய சேத்தன் சர்மா விவகாரம்.. திடீர்ன்னு எடுத்த பரபர முடிவு!!

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து இரு அணிகளும் தற்போது 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தி இருந்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். விக்கெட்டுகளை இழந்தாலும் ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடி ரன் சேர்த்தும் வருகிறது. மேலும், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவும் செய்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

முதல் டெஸ்ட் போட்டியை போலவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முகமது ஷமி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி, புஜாரா உள்ளிட்டோர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட்டை முகமது ஷமி எடுத்திருந்தார். அதே போல டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் ஷமி வீழ்த்தி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு மத்தியில், 3 ஆவது ஓவரை முகமது ஷமி வீசிய போது பந்து அவரது கையில் இருந்து நழுவி சென்றதாக தெரிகிறது. மேலும் அந்த பந்து ஆஃப் சைடு பிட்ச்க்கு வெளியே சென்றதால் நோ பால் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஷமி இப்படி ஒரு பந்தை வீசியதும் ஸ்லிப்பில் நின்ற கோலி மற்றும் புஜாரா உள்ளிட்ட வீரர்களின் ரியாக்ஷனே ஒரு நிமிடம் மாறிப் போனது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகியும் வருகிறது.

Also Read | முதல் டெஸ்ட்ல ஜடேஜா, 2 ஆவது Test -ல அஸ்வின்.. "ஒரே ஓவரில் மாயாஜாலம் செய்த சூழல்".. போட்டியையே மாத்திட்டாரே!!

CRICKET, MOHAMMED SHAMI BIZARRE, VIRAT KOHLI, PUJARA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்