"எனக்கு என்ன நடந்துச்சோ.. அவங்களுக்கும் அது நடக்கணும்".. பாக். பவுலருக்கு ரிஸ்வான் போட்ட ஆர்டர்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தனது அணி பவுலரிடம் தான் கூறிய விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | கணவரின் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவு.. அந்த காதலனாலேயே பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகள் மோதிய  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை பெற்றிருக்கிறது.

இதனிடையே, முல்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய இங்கிலாந்து, 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் 328 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை தூக்கினார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆண்டர்சன் வீசிய பந்தை தடுமாறி டிரைவ் ஆட முயன்றார் ரிஸ்வான். ஆனால், பந்து ஆஃப் ஸ்டம்பை சிதறடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரிஸ்வான் அவுட் ஆன பிறகும் அப்படியே நின்றிருந்தார். வர்ணனையாளர்களும் ஆண்டர்சனின் அந்த பந்தை சிலாகித்து பேசினர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், போட்டியின் இடையே இதுபற்றி மனம் திறந்திருக்கிறார் ரிஸ்வான். அப்போது, "அவர் (ஆண்டர்சன்) எப்போதுமே ஒரு மாஸ்டர்கிளாஸ். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடைய கேள்விகளுக்கு எப்போதும் என்னிடத்தில் பதில் இருந்ததில்லை. அவுட் ஆகி வெளியேறிய பின்னர் நசீம் ஷாவை சந்தித்தேன். அப்போது. ஆண்டர்சன் எனக்கு எப்படி பந்து வீசினாரோ? அதேபோல் நீ இங்கிலாந்து வீரர்களுக்கு பந்துவீசவேண்டும் என்றேன்" என கலகலப்புடன் கூறினார். இதனிடையே இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | Annamalai: "அங்க கைகட்டி நின்னு கும்பிட்டாதான் படம் ரிலீஸ்... அந்த நடிகரின் படம் மட்டும்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போகுது" .. அண்ணாமலை பேச்சு..

CRICKET, MOHAMMED RISWAN, ANDERSON, BOWLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்