‘என்னங்க சொல்றீங்க உண்மையாவா..!’ ரெண்டு நாள் ICU-ல் சிகிச்சை.. பாகிஸ்தான் வீரர் பற்றி வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வீரர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த தகவல் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது.

‘என்னங்க சொல்றீங்க உண்மையாவா..!’ ரெண்டு நாள் ICU-ல் சிகிச்சை.. பாகிஸ்தான் வீரர் பற்றி வெளியான பரபரப்பு தகவல்..!
Advertising
>
Advertising

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான  டி20 உலகக்கோப்பை (T20 World Cup) அரையிறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 67 ரன்களும், ஃபகார் ஜமான் 55 ரன்களும் எடுத்தனர்.

Mohammad Rizwan spent two nights in ICU before semi-final

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Mohammad Rizwan spent two nights in ICU before semi-final

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி நுழைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்களும், மேத்யூ வேட் 41 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானை (Mohammad Rizwan) தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு காரணம், அரையிறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சுவாச குழாயில் ஏற்பட்ட தீவிர தொற்றின் காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் முகமது ரிஸ்வான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின் நேற்று காலைதான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்படி இருக்கையில், நேற்று இரவு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் களம் கண்டார். அதுமட்டுமல்லாமல், அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அரைசதம் (67 ரன்கள்) அடித்து காப்பாற்றினார்.

அதனால் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ ஹைடன், முகமது ரிஸ்வானை ‘உண்மையான போராளி’ என்று பாராட்டினார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உள்ளிட்ட பல வீரர்கள் முகமது ரிஸ்வானை பாராட்டி வருகின்றனர்.

PAKISTAN, PAKVAUS, T20WORLDCUP, MOHAMMADRIZWAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்