இந்திய ப்ளேயர்ஸ் மேல் மரியாதை இருக்கு.. அதுக்காக இதெல்லாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. பாகிஸ்தான் வீரர் ‘பளீச்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இந்திய அணியுடனான தங்களது உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அசத்தல்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து அரையிறுதியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்

குரூப் ஸ்டேஜில் தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடியது. அப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அசத்தியது. அப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கேப்டன் பாபர் அசாம் (68 ரன்கள்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (79 ரன்கள்) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி (3 விக்கெட்டுகள்) ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

முகமது ரிஸ்வான்

இந்த நிலையில் முகமது ரிஸ்வான் இந்திய வீரர்களுடனான உறவு பற்றி பேசியுள்ளார். அதில், ‘ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைப் பற்றி எங்களுக்கு வெவ்வேறு உணர்வுகள் மற்றும் கருத்துகள் இருக்கலாம். ஆனால் களத்தில், நாங்கள் அவர்களை வீழ்த்துவது பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனாலும் களத்திற்கு வெளியே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் அதிக மரியாதையும் அன்பும் இருக்கிறது.

சதமடிக்க விட்டுக்கொடுக்க மாட்டோம்

அதற்காக 99 ரன்களில் ஆடும் வீரரை சதம் எடுக்கட்டும் என்றெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டோம். அங்கு நட்பு, பாசம் கிடையாது. இது ஒருபோதும் நடந்ததில்லை. எங்களிடம் ஒரே ஒரு சிந்தனை, செயல்முறை மட்டுமே உள்ளது. அது எந்த நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

ஒரே குடும்பம்

டி20 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு, நிறைய வீரர்கள் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். மைதானத்திற்கு வெளியே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என அனைத்து நாடுகளும் ஒரே கிரிக்கெட் குடும்பம் போல் நாங்கள் இருக்கிறோம்’ என்று முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். சமீபத்தில் ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருது முகமது ரிஸ்வான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MOHAMMADRIZWAN, INDVPAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்