"கோலி தான் காரணம்.. ரோஹித் கிடையாது.." கடும் கோபத்தில் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு ட்வீட் தான் காரணம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.
அது மட்டுமில்லாமல், ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை என்பது தான் மிகப் பெரிய சிறப்பம்சமே.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்றிருந்தார்.
நம்பர் 1 அணி
அவரது தலைமையில், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20 என அனைத்திலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே குவித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி, மூன்றாவது நாளிலேயே வெற்றியை சூடி அசத்தியிருந்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிகம் அச்சுறுத்தும் அணியாகவும் இந்தியா விளங்கி வருகிறது.
ரசிகர்கள் கோபம்
இந்நிலையில், இந்தியாவின் டெஸ்ட் அணி குறித்து, முன்னாள் வீரர் முகமது கைஃப் போட்டுள்ள ட்வீட் ஒன்று, இந்திய ரசிகர்களை அதிகம் கோபம் அடையச் செய்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற பிறகு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அது பற்றி ட்வீட் ஒன்றை கைஃப் பதிவிட்டிருந்தார்.
உருவாகும் டெஸ்ட் அணி
"ராகுல், ரோஹித், விராட், ஐயர், பண்ட், அஸ்வின், பும்ரா, ஷமி மற்றும் இன்னும் நிறைய 11 பேருக்கான ஆப்ஷன்கள்.. திடீரென எல்லாம் நன்றாக இருக்கிறது. ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோரின் கீழ், உலக அணிகளை வீழ்த்தக் கூடிய டெஸ்ட் அணி உருவாகி வருகிறது" என கைஃப் குறிப்பிட்டிருந்தார்.
கோலி தான் காரணம்
இந்த கருத்து தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு, கோலிக்கு தான் உள்ளது. அவரது தலைமையிலேயே சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியா உருவெடுத்து விட்டது. அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போதும் இதே வீரர்கள் தான் அணியில் இருந்தனர். அப்படி இருக்கும் போது, ரோஹித் மற்றும் டிராவிட்டை மட்டும் நீங்கள் எப்படி பாராட்டலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
அதே போல, இந்திய டெஸ்ட் அணியை சாம்பியன் அணியாக மாற்றியதிலும், கோலி மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு தான் முக்கிய பங்குள்ளது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் நன்றிகளை கூறாமல், ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோரை வாழ்த்தியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பரபரப்பை கிளப்பிய ட்வீட்
மேலும், டெஸ்ட் வரிசையில் ஏழாம் இடத்தில் இருந்த இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்தியது கோலியும், ரவி சாஸ்திரியும் தான். வெளிநாட்டு மைதானங்களில் பல டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்தும் கோலி தலைமையில் தான். அப்படி இருக்கும் போது, ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோரை மட்டும் பாராட்டியது ஏன் என்றும் கமெண்ட்டில் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலியை விட ரோகித் தான் பெஸ்ட் கேப்டன்" - சர்ச்சையை கிளப்பிய முன்னாள் இந்திய வீரர் கருத்து
- சேட்டை புடிச்ச ஆளுய்யா இந்த கோலி.. பக்கத்துல அவர் இருக்கும்போதே இப்டி கிண்டல் பண்றாரே.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!
- “ABD.. ABD..”-னு கத்திய ரசிகர்கள்.. உடனே கோலி பண்ண விஷயம்.. மனுசன் எப்பவுமே ‘வேறலெவல்’ தாங்க..!
- "இது எல்லாம் நியாயமா கேப்டன்?.." சீரியஸா போயிட்டு இருந்த மேட்ச்.. நடுவில் வேடிக்கை காட்டிய ரோஹித்
- "இத்தனை வருசமாக கட்டிக்காத்து வந்த ரெக்கார்டு".. 5 வருசத்தில் முதல்முறை சறுக்கிய கோலி..!
- இந்திய வீரர் கோலிக்காக.. பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் .. போட்டி நடுவே நெகிழ்ச்சி..
- INDvSL - Day Night பெங்களூரு டெஸ்ட் நடக்குமா? மழை வருமா? பிட்ச் யாருக்கு சாதகம்... இந்தியா ஜெயிக்க என்ன செய்யனும்! முழு தகவல்
- "ஐபிஎல் நேரத்துல.. அந்த ஒரே ஒரு பிளேயர்னால தூக்கமே இல்லாம தவிச்சேன்.." பழசை நினைத்து ஃபீல் பண்ணிய கம்பீர்
- “உங்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்க போறேன்..” பாதியிலேயே ‘கட்’ ஆன வீடியோ.. கோலி என்ன சொல்ல வந்தார்? எகிறும் எதிர்பார்ப்பு..!
- "ரோஹித் Tongue ஸ்லிப் ஆகி சொல்லி இருப்பாரு.." சீண்டிய முன்னாள் வீரர்.. அஸ்வின் பவுலிங் பெயரில் வெடித்த விவகாரம்