தினேஷ் கார்த்திக், மோர்கன் இருந்த டைம்'ல... அந்த பையன டீம்'ல சேக்காம வீட்லயே உக்கார வெச்சாங்க.. 'KKR'ஐ விளாசிய முகமது கைஃப்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

“இந்நேரம் நான் அங்க இருந்திருக்கணும்”.. “வீட்டுல இருந்து ஐபிஎல் மேட்ச் பாக்க வேதனையா இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கம்..!

இன்று நடைபெறவுள்ள ஏழாவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி தங்களின் முதல் லீக் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. அதே போல, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும், குஜராத் அணிக்கு எதிரான தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.

இதனால், இரு அணிகளும் இன்று (31.03.2022) மோதவுள்ள போட்டியில், ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதே போல, இந்த ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாமல் போன பல வீரர்கள், சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஃபார்முக்கு வரும் வீரர்கள்

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்த தோனி, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், 50 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அதே போல, கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ், இரண்டு போட்டிகளிலும், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார்.

மேலும், இந்திய அணியில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த குல்தீப் யாதவ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கி, மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றிருந்தார். பல இந்திய வீரர்கள் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி வருவது, ரசிகர்கள் மத்தியில் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா அணி மீது விமர்சனம்

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், குல்தீப் யாதவின் பயிற்சியாளர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்து தெரவித்திருந்த கருத்து, கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. கடந்த சில சீசன்களில், கொல்கத்தா அணிக்காக குல்தீப் யாதவ் ஆடி வந்தார். இதில், சுமார் 5 முதல் 6 போட்டிகளில் தான் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனால், இந்திய அணியிலும் பெரிதாக குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனைக் குறிப்பிட்டு பேசிய குல்தீப்பின் பயிற்சியாளர் கபில் பாண்டே, கொல்கத்தா அணி குல்தீப்பை ஒரு வேலைக்காரனை போல நடத்தியதாக குற்றம் சுமத்தி இருந்தார். இந்நிலையில், கொல்கத்தா அணி குறித்து, முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்பும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வீட்டுலயே உட்கார வெச்சாங்க

"தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை குல்தீப் யாதவ் நிரூபித்து விட்டார். ஆனால், அவர் நன்கு நிர்வகிக்கப்பட வேண்டியவர். சற்று எமோஷனல் அதிகமுள்ள குல்தீப், அணியில் தேர்வு செய்யப்படாமல் போனாலோ, அல்லது பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலோ, உடனே தளர்ந்து போவார். தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் கேப்டனாக இருந்த போது,  கொல்கத்தா அணியில் கூட குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. அவரை வீட்டிலேயே உட்கார வைத்து விட்டார்கள். இப்படி நாம் நடந்து கொள்ளும் போது, எந்த மேட்ச் வின்னராக இருந்தாலும் அதிக நெருக்கடியை உணர்வார்கள்" என கைஃப் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தன்னுடைய திறனை நிரூபித்துள்ள குல்தீப் யாதவிற்கு, அதிக வாய்ப்புகளை கொடுக்காமல், கொல்கத்தா அணி அவரை வீணடித்து விட்டது என ரசிகர்களும் ஒரு பக்கம் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

CRICKET, IPL, MOHAMMAD KAIF, KOLKATA KNIGHT RIDERS, KKR, KULDEEP YADAV, IPL2022, முகமது கைஃப், ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்