'சீனியர்' வீரருக்கும், 'இளம்' வீரருக்கும் நடந்த காரசார 'வாக்குவாதம்'... "'அப்ரிடி' சொன்னது இது தான்..." முதல் முறையாக மனம் திறந்த 'அமீர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, இலங்கையில் லங்கன் பிரீமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் கல்லீ க்ளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் சில தினங்களுக்கு முன் மோதியிருந்தனர். இந்த போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், போட்டி முடிவடையும் போது, கல்லீ அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும், கண்டி அணியில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரரான நவீன் உல் ஹக் என்பவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.
சற்று கடுமையாக, இருவருக்குள்ளும் வாய்த் தகராறு நடைபெற்றிருந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது, கல்லீ க்ளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாகிஸ்தான் வீரரான ஷாஹித் அப்ரிடி, இளம் வீரர் நவீன் உல் ஹக்கிடம் கோபமாக எதையோ தெரிவித்திருந்தார்.
இந்த சண்டை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியிருந்த நிலையில், இதுகுறித்து அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த சண்டையின் போது நவீன் உல் ஹக்கிடம் அப்ரிடி என்ன தெரிவித்தார் என்பது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார்.
'சீனியர் வீரர்களிடம் இப்படி நடந்து கொள்வது சரியல்ல. இது வெறும் விளையாட்டு தான். இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என நவீனிற்கு அப்ரிடி அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் நவீனைப் போலத் தான் நானும் இருந்தேன். நமது பந்துகளை பேட்ஸ்மேன் அடிக்கும் போது சற்று கோபம் வரும். ஆனால், நான் இப்போது சுத்தமாக மாறி விட்டேன். இளம் வீரரான நவீனும் அதனை விரைவில் புரிந்து கொள்வார்' என அமீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கிரிக்கெட் ஆடுறப்போ இந்த விஷயத்த 'முதல்'ல கத்துக்கோங்க..." 'போட்டி'யின் போது கடுப்பான 'அப்ரிடி'... அதன் பின்னர் அளித்த 'விளக்கம்'!!!
- "'பேட்டிங்' எறங்குறப்போ இப்டி தான் வருவீங்களா??..." 'அப்ரிடி' செய்த அந்த 'செயல்'... வறுத்தெடுத்த 'நெட்டிசன்'கள்,.. சர்ச்சை 'சம்பவம்'!!!
- ‘ஸ்பாட் ஃபிக்சிங்’.. ‘ரூம்ல வைச்சு கன்னத்தில பளார்னு ஒரு அடி’.. வெளியான பாகிஸ்தான் வீரர் ரகசியம்!
- ‘உலகக்கோப்பை பட்டியலில் இருந்து 3 வீரர்கள் நீக்கம்’.. ‘புதிதாக இணையும் 3 வீரர்கள்’.. திடீர் மாற்றத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..!
- ‘2 நட்சத்திர வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!