‘அவர் விளையாடுறது டவுட் தான்’.. முதல் மேட்சை ‘மிஸ்’ பண்ணும் முக்கிய சிஎஸ்கே வீரர்?.. எல்லாத்துக்கு காரணம் அதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் 15-வது வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சூரத் சென்ற சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் தீபக் சஹார் காயம் காரணமாக விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. அதனால் அவரும் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்பே ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் மொயின் அலி இந்தியா வந்தாலும் 3 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார். அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே எனக்காக 15 போட்டிகளில் விளையாடிய மொயின் அலி 357 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் சிஎஸ்கே அணி இவரை ஏலத்துக்கு முன்பே தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விசா சிக்கலால் முதல் போட்டியில் மொயின் அலி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

CSK, IPL, MOEENALI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்