இவங்க 'பெண்கள் கிரிக்கெட்டின்' சச்சின்பா .. மிதாலி ராஜ் படைத்த ரெக்கார்டு பிரேக்கிங் சாதனை

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் கேப்டன் மிதாலி ராஜ் 6 உலகக்கோப்பையில் கலந்துகொண்ட முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Advertising
>
Advertising

புதுச்சேரி கடல் சீற்றம்… நள்ளிரவில் இடிந்து விழுந்தது பழமையான துறைமுகப் பாலம்! பரபரப்பு சம்பவம்

6 உலகக்கோப்பைகளில் விளையாடிய மிதாலி:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என மிதாலி ராஜை சொல்லலாம். சச்சினை போலவே மிக இளம் வயதில் 1999 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடி வருகிறார். 39 வயதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வழிநடத்தி வரும் அவர் தலைமை தாங்கும் நான்காவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டை பெலிண்டா கிளார்க் 4 முறை தலைமையேற்று நடத்தியுள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டில் 4 உலகக்கோப்பைக்கு எந்த ஒரு வீரரும் தலைமையேற்றதில்லை.

மிதாலி ராஜின் 23 ஆண்டுகள்:

23 ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடிவருகிறார் மிதாலி ராஜ். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 1989- 2013 வரை  24 ஆண்டுகாலம் சர்வதேசக் கிரிக்கெட்  போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார். அந்த சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7623 ரன்களை 51.85 என்ற சராசரியில் சேர்த்துள்ளார். இதில் 7 சதங்களும் 62 அரை சதங்களும் அடங்கும். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் பிரிவில் அதிக ரன்கள் சேர்த்த வீராங்கனையாக இவர் உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பை இவருக்கு 6 ஆவது உலகக்கோப்பையாகும்.

சச்சினும் ஜாவித் மியாண்ட்டடும்:

இதற்கு முன்னர் 6 உலகக்கோப்பைகள் விளையாடிய வீராங்கனை யாருமே இல்லை. ஆனால் ஆண்கள் கிரிக்கெட்டில் இந்த சாதனையை இருவர் வைத்திருக்கின்றனர். இந்தியாவின் சச்சின் 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அறிமுகமாகி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை தொடர்ந்து 6 உலகக்கோப்பையில் விளையாடினார். அதே போல பாகிஸ்தான் வீரரான ஜாவித் மியாண்டட் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் உலகக்கோப்பையில் இருந்து 1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாடினார். இவர்கள் இருவரில் ஒருவர் கூட இல்லாமல் நடந்த முதல் உலகக்கோப்பை தொடர் 2015 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களின் இந்த முறியடிக்க முடியா சாதனையை இப்போது மிதாலி ராஜ் சமன் செய்துள்ளார்.

சாதனையை முறியடிப்பாரா:

தற்போது 39 வயதாகும் மிதாலி ராஜ் முழு உடல்தகுதியுடன் இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார். அதனால் அவர் இன்னொரு உலகக்கோப்பை வரை விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி அவர் விளையாடும் பட்சத்தில் 7 உலகக்கோப்பையில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

அட.. கோலியை அழகா வெட்கப்பட வெச்சுட்டாருப்பா ரோஹித்.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் செம்ம!

CRICKET, MITHALIRAJ, SACHIN TENUDULKAR, மிதாலி ராஜ், இந்திய பெண்கள் கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்