'3' வருசத்துக்கு முந்துன 'பகை'.. மீண்டும் 'நேருக்கு நேர்' சந்திக்கும் 'பவார்' - 'மிதாலி ராஜ்'.. "இனிமே 'Women's Team'ல நடக்கப் போறதே இது தான்!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபுள்யூ.வி. ராமன் செயல்பட்டு வந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய பயிற்சியாளராக ரமேஷ் பவாரை மதன்லால் தலைமையிலான ஆலோசனைக் குழு மீண்டும் நியமித்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. அந்த சமயத்தில் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டிருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜுக்கும், ரமேஷ் பவாருக்கும் நேரடியாக மோதல் இருந்தது.
உலக கோப்பைத் தொடரின் அரை இறுதியில், மிதாலி ராஜை ரமேஷ் பவார் களமிறக்கவில்லை. இதிலிருந்தே, இருவருக்குமான மோதல் வெளிப்படையாக தெரிய வர, மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கித் தள்ளினர். இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்த சம்பவம் அதிகம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அடுத்ததாக டபுள்யூ.வி. ராமன் புதிய பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது, மீண்டும் ரமேஷ் பவார் பயிற்சியாளாராக செயல்படவுள்ள நிலையில், இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை ஆடவுள்ளது. அதே போல, அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கோப்பைக்காகவும், அணியைத் தயார் செய்யும் கடமை ரமேஷ் பவாருக்கு உள்ளது.
மேலும், மீண்டும் மித்தாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர் இணைந்து பணிபுரியவுள்ளதால், மூன்றாண்டுகளுக்கு முன்புள்ள பகையை மனதில் வைத்து செயல்படுவார்களா என்பது போன்ற கேள்விகளும் அதிகம் எழுந்தது. இந்நிலையில், ரமேஷ் பாவாணருடன் மீண்டும் இணைந்து செயல்படவுள்ளது பற்றி, மிதாலி ராஜ் (Mithali Raj) முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
'கடந்த காலம் முடிந்து விட்டது. நீங்கள் இனிமேல் அங்கு திரும்பிச் செல்லவோ, அதைப் பற்றி பேசவோ கூடாது. ரமேஷ் பவார் சிறந்த திட்டங்களுடன் வருவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அதன் மூலம், நாங்கள் இருவரும் இணைந்து, அணியைச் சிறப்பாக வழி நடத்துவோம்.
நாங்கள் இணைந்து செயல்பட்டு, எதிர்காலத்திற்கான வலுவான அணியை உருவாக்குவோம். அதிலும் குறிப்பாக, அடுத்த ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியை வலிமையாக்குவோம்' என நம்பிக்கையுடன் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்