‘3வது போட்டியில நான் ஆடல!’.. டி20 மகளிர் உலகக்கோப்பை மைதானத்திற்கு சென்று நெகிழவைத்த மிட்செல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் திடீரென மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகி, தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பினார். அதன்பிறகுதான் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் நேரில் காண அவர் விருப்பப்பட்டு சென்றதாக தெரியவந்தது. இதற்கான காரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றாகவே தெரியும்.
ஆம், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி, மிட்செலின் மனைவி என்பதும் அவரை உற்சாகமூட்டவே, ஸ்டார்க் தன்னுடைய சொந்த நாடு திரும்பியதும்தான் அந்த சுவாரசியமான காரணம். சொந்த நாடு திரும்ப அனுமதி கிடைத்ததும் ஸ்டார்க் மைதானத்துக்குள் நுழைந்து பெருந்திரளான மக்கள் மத்தியில் தனது மனைவியை உற்சாகப்படுத்தும் ரசிகர்களின் ஒருவராக ஆர்ப்பாட்டமில்லாமல் அமர்ந்து, இறுதி ஆட்டத்தை கண்டு களித்துள்ளார்.
அவருடைய இந்த முடிவுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட பல விளையாட்டு பிரபலங்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். அலிசாவின் ஆட்டம் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்றது. கேமராவின் கண்களோ அலிசாவையும் மிட்செல் ஸ்டார்க்கையும் அவ்வப்போது படமெடுத்து இறுதிப் போட்டியை கூடுதலான சுவாரசியத்துடன் காட்டிக் கொண்டிருந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்