‘யாரும் நெருங்காத ஆஸ்திரேலிய வீரரின் சாதனை’.. 12 வருடம் கழித்து முறியடித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(9), அரோன் பின்ஞ்(0) மற்றும் ஹேன்ஸ்கோம்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்(85) மாற்றும் அலெக்ஸ் கேரி(46) கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகளாக உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை என்ற குறையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சளார் மிட்செல் ஸ்டார்க், அந்நாட்டு வீரர் மெக்ராத் உலகக்கோப்பையில் படைத்த சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2007 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் மெக்ராத் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைந்திருந்தார். இதனை 12 வருடங்கள் கழித்து அதே நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கோப்பை தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து முறியடித்துள்ளார்.

ICCWORLDCUP2019, AUSVENG, MITCHELL STARC, MCGRATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்