2007 T20 World Cup: ஏன் தான் அந்த ஷாட்டை ஆடுனேனோ? தன்னைத் தானே நொந்து கொண்ட மிஸ்பா

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி-20 உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் தான் எதிர்கொண்ட கடைசி பந்து குறித்து மிஸ்பா உல் ஹாக் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

சாதாரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இது டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி  வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற  20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக ஐசிசி, டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற அந்த முக்கியமான இறுதிப் போட்டியில் இந்திய அணி இறுதியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.



அந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய இரண்டு ஆட்டங்களும் கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தின் உச்சமாகவே  இன்றும் பார்க்கப்படுகிறது. லீக் போட்டியில் பின்னர் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இதேபோல் இறுதிப் போட்டியிலும், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வாகை சூடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்ததால் நிச்சயம் மீதமிருந்த பந்துகளில் ஒரு சிக்சரை விளாசுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அப்போது ஜொஹிந்தர் சர்மா வீசிய பந்தில் ஸ்கூப் ஷாட் விளையாடி ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் ஆகி மிஸ்பா ஆட்டமிழந்தார்.  அந்த போட்டியில் மிஸ்பா 38 பந்துகளில் 4 சிக்சருடன் 43 ரன்களை எடுத்திருப்பார். தோனி தலைமையிலான இளம் இந்திய அணி முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில். அப்படி  தான் எதிர்கொண்ட பந்தை  ஹூக் ஷாட் விளையாட என்ன காரணம் என்பது குறித்து  14 ஆண்டுகள் கழித்து மிஸ்பா உல் ஹக் தற்போது தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். நான் எனது பேட்டிங் திறனில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். குறிப்பாக ஸ்கூப் ஷாட்டை ஆடுவதில் சிறந்து விளங்கினேன். அந்த தொடர் முழுவதும் இத்தகைய ஷாட்டால், பவுண்டரிகளை எடுத்தேன்.

அதனாலேயே, 'நான் அந்த ஷாட்டை ஆட முயற்சித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அது விக்கெட்டில் முடிந்தது. நான் மிகவும் நம்பிக்கையுடன் அந்த ஷாட்டை தவறாக அடித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

2007 T20 WORLD CUP, IND VS PAK, DHONI, MISBAH UL HAQ, SCOOP SHOT, SREESHANT, JOHINDAR SINGH, PAKISTAN, FINALE, INDIA WON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்